Katrina Kaif Vicky Kaushal | வைரலான ’நன்றி’ குறிப்பு... நெகிழ்ந்து உருகிய கத்ரீனா - விக்கி கெளஷல்
திருமணத்தின் போது கத்ரீனா கையில் அணிந்திருந்த மோதிரம் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சத்துக்கு மேல்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர்கள் கத்ரீனா விக்கி கௌஷால் திருமணம் சந்தடியில்லாமல் அதே சமயம் படுகாஸ்ட்லியாக நடந்துமுடிந்துள்ளது. திருமணம் குறித்த புகைப்படங்கள் வெளியான நிலையில் கத்ரீனாவின் நகைகள் மற்றும் திருமண உடை குறித்து பெரிய ஆராய்ச்சியே நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக நீலக்கல் பதித்த ப்ளாட்டினம் மோதிரம் குறித்து அனைவரும் விவாதித்து வருகின்றனர். திருமணத்துக்கு வந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கத்ரீனாவும் விக்கியும் பகிர்ந்துள்ள நன்றிக்குறிப்பு வைரலாகிறது. எங்களுக்காக இவ்வளவு பயணித்ததற்கு நன்றி. மீதமிருக்கும் எங்கள் வாழ்வின் தொடக்க நிகழ்வில் பங்கு கொண்டது, இந்த உலகளவு பெரிய விஷயமாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.
View this post on Instagram
திருமணத்தின் போது கத்ரீனா கையில் அணிந்திருந்த மோதிரம் மட்டும் இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சத்துக்கு மேல். மாப்பிள்ளை விக்கி கௌஷால் அணிந்திருந்த சிம்பிளான கல் எதுவும் இல்லாத ரிங் வகை மோதிரம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல். கத்ரினாவின் மோதிரம் ப்ளாட்டினத்தால் செய்யப்பட்டு நடுவில் சதுரங்க வடிவிலான நீலக்கல் பதிக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற நகைவடிமைப்பாளரன டிஃபானி சொலெஸ்ட்டின் வடிவமைப்பு இது. இந்தத் திருமண நிகழ்ச்சி, ராஜஸ்தானின் சிக்ஸ் சென்சஸ் கோட்டையில் நடைபெற்றது. 14-வது நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோட்டையை, ராஜஸ்தானின் அரச குடும்பம் ஒன்று தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மூன்று நாள்கள் நடைபெறும் இந்தத் திருமண நிகழ்வில் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. சுமார் 120 விருந்தினர்களுக்குப் பல்வேறு குதூகலமூட்டும் நிகழ்ச்சிகளை நடத்த மிகச் சிறந்த நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டன.
மணப்பெண்ணான கத்ரினாவுக்கு மெஹந்தி, சங்கீத், திருமணம், திருமண வரவேற்பு எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் தலைசிறந்த வடிவமைப்பாளர்களான அபு ஜானி, மணிஷ் மல்ஹோத்ரா ஆகியோரது வடிவமைப்பிலான ஆடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன, விக்கியின் உடைகளைக் குணால் ராவல், ராகவேந்திரா ரத்தோர் ஆகிய பிரபல வடிவமைப்பாளர்கள் தயாரித்தனர். இந்தத் திருமண நிகழ்ச்சியில் சுமார் 120 விருந்தினர்கள் கலந்துகொண்டனர். அனைத்து விருந்தினர்களுக்கும் தனித்தனியாக ரகசிய எண் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. விருந்தினர்களின் பட்டியலில் கரண் ஹோஜர், அலி அப்பாஸ் ஜாபர், கபீர் கான், மினி மதூர், ரோஹித் ஷெட்டி, சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, வருண் தவான், ராதிகா மதன், ரவீனா டாண்டன், நேஹா தூபியா முதலானோர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது