மேலும் அறிய

PC Sreeram : 'ஆபாச பிரச்சார திரைப்படமா'? மக்களை பிரித்து ஆட்சிக்கு வர முயலுகிறீர்கள்...தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளுத்து வாங்கிய பி.சி. ஸ்ரீ ராம்..! 

தி கேரளா ஸ்டோரி படத்தில் கேரள அரசுக்கு எதிரான கருத்துகள் எதுவும் கூறப்படவில்லை என்றும், எந்த காட்சியும் தரக்குறைவாக இருக்காது எனவும்  தயாரிப்பாளர் விபுல் ஷா தெரிவித்திருந்தார்.

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் “தி கேரளா ஸ்டோரி” . இந்தியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் யோகிதா பிஹானி , சோனியா பாலானி, அதா ஷர்மா , பிரணவ் மிஷ்ரா, மற்றும் சித்தி இத்னானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் நாளை மறுதினம் (மே 5) தியேட்டர்களில் வெளியாவதாக இருந்தது. 

பரபரப்பை கிளப்பிய 'தி கேரளா ஸ்டோரி':

கேரளாவைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு  மத மாற்றப்பட்டு இஸ்லாமிய நாடான ஈராக் மற்றும் சிரியாவில் ISIS அமைப்பில் சேருவதாக இந்த படத்தில் ட்ரெய்லரில் காட்டப்பட்டது. இது உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் போஸ்டர் முன்னதாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானபோது கடும் சர்ச்சைகளை கிளம்பியது. இப்படத்தின் ட்ரெய்லர்  வகுப்புவாதம் மற்றும் கேரளாவிற்கு எதிரான வெறுப்பு பிரச்சாரத்தை பரப்பும் நோக்கத்துடன் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.

மேலும் படத்தை வெளியிடக்கூடாது  என பலரும் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் நேற்றைய தினம் இதனை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்தனர்.

'தி கேரளா ஸ்டோரி' இயக்குநர் விளக்கம்:

இச்சூழலில், தி கேரளா ஸ்டோரி படத்தில் கேரள அரசுக்கு எதிரான கருத்துகள் எதுவும் கூறப்படவில்லை என்றும், எந்த காட்சியும் தரக்குறைவாக இருக்காது எனவும்  தயாரிப்பாளர் விபுல் ஷா தெரிவித்திருந்தார். மேலும்  இப்படம் தீவிரவாதிகளை குறிவைத்து எடுக்கப்பட்டதே தவிர, இஸ்லாமியர்களை குறிக்கவில்லை. எனவே கேரளா முதல்வர் பினராயி விஜயன் தி கேரளா ஸ்டோரி படத்தை பார்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பல மாத ஆராய்ச்சிக்குப் பிறகு தான் படத்தைத் இயக்கியதாகவும், பாதிக்கப்பட்டவர்களுடன் பேசிய பிறகு நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன் எனவும் இயக்குநர் சுதிப்தோ சென்  தெரிவித்திருந்தார். 

இந்த திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீ ராம், "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தை ஆபாச படம் என விமர்சித்துள்ளார். 

வெளுத்துவாங்கிய பி.சி. ஸ்ரீ ராம்:

பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ள பி.சி. ஸ்ரீ ராம், "ஒரு காலத்தில் ஆட்சிக்கு வர மக்களை ஒன்றிணைத்தார்கள். இப்போது, நீங்கள் வெறுப்பூட்டி மக்களை பிரித்து ஆட்சிக்கு வர முயலுகிறீர்கள். இந்த நச்சுத்தனமான அணுகுமுறையால் மக்களாகிய நாங்கள்தான் பாதிக்கப்படுகிறோம். ஜெய்ஹிந்த்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

"The kashmir files போன்று தி கேரளா ஸ்டோரி திரைப்படமும் ஆபாச பிரச்சார திரைப்படமா என்றும் அவர் கேள்வி எழுவப்பியுள்ளார். 

எதிர்ப்புகளுக்கு மத்தியில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின்சிறப்புக் காட்சியை பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)  நேற்று நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

MK Stalin: இது ஸ்டாலின் கணக்கு... பூத்துக்கு 350! டார்கெட் 200.. முதல்வர் போட்ட பக்கா ஸ்கெட்ச்
MK Stalin: இது ஸ்டாலின் கணக்கு... பூத்துக்கு 350! டார்கெட் 200.. முதல்வர் போட்ட பக்கா ஸ்கெட்ச்
MK Stalin: மக்களுக்கு ஸ்மைல்... விரோதிகளுக்கு ஷாக்.. திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் மாஸ் பேச்சு
MK Stalin: மக்களுக்கு ஸ்மைல்... விரோதிகளுக்கு ஷாக்.. திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் மாஸ் பேச்சு
"பணம் தேவை.. வீட்ல கூட அண்ணன் பேச்சைத்தான் கேப்பாங்க.." பிரபுதேவா தம்பி உருக்கம்!
இதுதான் சத்திய சோதனை! 10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது இத்தனை ஆயிரம் புகார்களா?
இதுதான் சத்திய சோதனை! 10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது இத்தனை ஆயிரம் புகார்களா?
ABP Premium

வீடியோ

Haryana Minister Anil Vij Vs SP | BJP அமைச்சர் vs SP
Kerala Viral Woman | Real அவ்வை சண்முகி!
Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: இது ஸ்டாலின் கணக்கு... பூத்துக்கு 350! டார்கெட் 200.. முதல்வர் போட்ட பக்கா ஸ்கெட்ச்
MK Stalin: இது ஸ்டாலின் கணக்கு... பூத்துக்கு 350! டார்கெட் 200.. முதல்வர் போட்ட பக்கா ஸ்கெட்ச்
MK Stalin: மக்களுக்கு ஸ்மைல்... விரோதிகளுக்கு ஷாக்.. திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் மாஸ் பேச்சு
MK Stalin: மக்களுக்கு ஸ்மைல்... விரோதிகளுக்கு ஷாக்.. திருப்பத்தூரில் முதல்வர் ஸ்டாலின் மாஸ் பேச்சு
"பணம் தேவை.. வீட்ல கூட அண்ணன் பேச்சைத்தான் கேப்பாங்க.." பிரபுதேவா தம்பி உருக்கம்!
இதுதான் சத்திய சோதனை! 10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது இத்தனை ஆயிரம் புகார்களா?
இதுதான் சத்திய சோதனை! 10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது இத்தனை ஆயிரம் புகார்களா?
400 சிசி எஞ்ஜின்.. ஹைவே-யில் அசத்தும் Triumph பைக்குகள் - விலை, மைலேஜ் உள்ளே!
400 சிசி எஞ்ஜின்.. ஹைவே-யில் அசத்தும் Triumph பைக்குகள் - விலை, மைலேஜ் உள்ளே!
காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படவில்லையா..? செய்தியாளர்களுக்கு உதயநிதி என்ன பதில் குடுத்தார் தெரியுமா?
காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்படவில்லையா..? செய்தியாளர்களுக்கு உதயநிதி என்ன பதில் குடுத்தார் தெரியுமா?
TNTET Exam 2026: ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க ரெடியா? தேதி, கட்டணம், தகுதி, தேர்வு முறைகள்..
TNTET Exam 2026: ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு; விண்ணப்பிக்க ரெடியா? தேதி, கட்டணம், தகுதி, தேர்வு முறைகள்..
IND vs PAK: பாக் எதிராக தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார், ஹர்திக்.. ஒரு அரை சதம் கூட இல்லை! அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்
IND vs PAK: பாக் எதிராக தொடர்ந்து சொதப்பும் சூர்யகுமார், ஹர்திக்.. ஒரு அரை சதம் கூட இல்லை! அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்
Embed widget