Parking Movie X Review: ஈகோ சண்டைய வச்சு ஒரு தரமான கண்டென்ட்.. ‘பார்க்கிங்’ படத்தை பாராட்டித் தள்ளும் நெட்டிசன்கள்!
Parking Movie Twitter Review: ஹரீஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள பார்க்கிங் படம் பற்றி ரசிகர்கள் என்ன சொல்றாங்க?
இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘பார்க்கிங்’. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். புதிதாக கார் வாங்கும் தம்பதி தங்கள் காரை பார்க்கிங் செய்வதில் தொடங்கும் பிரச்னை, பக்கத்து வீட்டுக்காரர்களான எம்.எஸ்.பாஸ்கர் - ஹரீஷ் கல்யாண் இடையே முற்றும் மோதல் எனும் கதைக்களத்துடன் இப்படத்தின் ட்ரெய்லர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி கவனமீர்த்தது.
ஹரீஷ் கல்யாணின் முந்தைய படமான எல்ஜிஎம் - லெட்ஸ் கெட் மேரிட் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வியைத் தழுவியது. இந்நிலையில் இந்தத் தோல்வியை பார்க்கிங் ஈடுகட்டும் என்ற நம்பிக்கை ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பின் ஹரீஷ் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்நிலையில், இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள பார்க்கிங் படம் பற்றி நெட்டிசன்கள் சொல்வது என்ன எனப் பார்க்கலாம்!
#Parking [#ABRatings - 3.75/5]
— AmuthaBharathi (@CinemaWithAB) December 1, 2023
- A simple plot but have executed very well👌
- Good First half takes which takes time to build the phase & Predictable from what we seen from trailer🤞
- But Second half was extraordinary with superb clash 🔥🔥
- Interval & Climax was High point❤️🔥… pic.twitter.com/DH2LD6SRRW
“முதல் பாதி சூப்பர். ட்ரெய்லரில் நாம் பார்த்து கணித்த கதை தான். ஆனால், இரண்டாம் பாதி மிகச்சிறப்பு. இண்டர்வெல், க்ளைமேக்ஸ் சூப்பர்” எனக் கூறியுள்ளார்.
Feel good movie
— மாஸ்டர் (@21bbc060) December 1, 2023
Super acting @iamharishkalyan @Actress_Indhuja #msbhaskar
Good screen play
Super direction
#RamkumarBalakrishnan
Oneline #Ego #anbumattume
Rating ⭐⭐⭐⭐/5 #Parking #ParkingFromToday#Parkingblockbuster pic.twitter.com/zmfuQTd7UM
“ஒன்லைன் ஈகோ. சூப்பர் டைரக்ஷன், சூப்பர் திரைக்கதை” எனக் கூறியுள்ளார்.
#Parking Well Made Ego Clash Action - Thriller
— ANGU_45 (@crazy_Boy_Angu) December 1, 2023
First Half - Wonderful Acting From @iamharishkalyan Anna And #MsBasker Sir
Fabulous 1st Half
Second Half - Completely Emotional And Mind-blowing Acting From @Actress_Indhuja Akka@iamharishkalyan Anna#MSBaskar
Over All ⭐⭐⭐⭐/5 pic.twitter.com/pfNsWLXRmK
“ஈகோ சண்டையை மையப்படுத்தி சிறப்பாக எடுக்கப்பட்ட த்ரில்லர் ஆக்ஷன் கதை” எனக் கூறியுள்ளார்.
#parking 🚗🚙- very engaging and entertainment movie..👏👏(quality content)#MSbaskar sir steals the show congratulation to entire team 💐@iamharishkalyan😇 @ImRamkumar_B 💐@sinish_s @Actress_Indhuja 🤩@SamCSmusic 👌 @philoedit🎞️ #ParkingMovie
— Dinesh (@dinesh18fed) December 1, 2023
“தரமான கண்டெண்ட். ஒன்ற வைக்கும், எண்டெர்டெயினிங்கான படம். எம்.எஸ்.பாஸ்கர் ஈர்க்கிறார்” எனக் கூறியுள்ளார்.
கொடுத்த காசுக்கு Worth Movie
— Tea Kada Raja (@Vaathiyaar_Ofl) December 1, 2023
தான்..
Thanks Na @iamharishkalyan
இன்னும் நிறைய Content Movies பண்ணுங்க ..#Parking pic.twitter.com/5yUX3JNkJM
“கொடுத்த காசுக்கு வொர்த். ஹரீஷ் கல்யாண் இன்னும் நிறைய கண்டெண்ட் படங்கள் பண்ணுங்க” எனக் கூறியுள்ளார்.