மேலும் அறிய

Michaung Cyclone: மிக்ஜாம் பாதிப்பு: உதவிக்கரம் நீட்டிய நாடு, பார்க்கிங் பட இயக்குநர்கள்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பார்க்கிங் மற்றும் நாடு படக்குழுவினர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

மிக்ஜாம் புயல்

கடந்த டிசம்பர் 4ஆம் தேதி சென்னையை நெருங்கிய மிக்ஜாம் புயல் மிகப்பெரிய பொருட்சேதங்களை ஏற்படுத்தியதோடு மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டும் பலத்த காற்றினால் ஏற்பட்ட சேதங்களோடும் காணப்படுகின்றன.

சென்னையில் சூளைமேடு, கோடம்பாக்கம், பெருங்குடி, ராயப்பேட்டை, ஊரப்பாக்கம், துறைமுகம், எண்ணூர், வியாசர்பாடி, சைதாபேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. சில பகுதிகளில் நீர் கொஞ்சம் கொஞ்சமாக வடியத் தொடங்கியிருந்தாலும் இன்னும் பல இடங்களில் மக்கள் வெள்ள நீர் காரணமாக அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் தத்தளித்து வருகிறார். 

மீட்பு பணிகள்

ஒரு பக்கம் அரசின் மீட்பு குழுவினர் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மீட்டுச் சென்றும் அவர்களுக்கு உணவு வழங்கியும் வருகையில் மறுபக்கம் தன்னார்வலர்கள் மக்களுக்கு உதவி வருகிறார்கள். தமிழ் சினிமாவைச் சேர்ந்த பிரபலங்கள் சிலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். 

2 லட்சம் நிதி அளித்த பார்க்கிங் படக்குழுவினர்

அந்த வகையில் சமீபத்தில் வெளியான பார்க்கிங் படக்குழுவினர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 2 லட்சம் ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளனர். ஹரிஷ் கல்யண், எம் எஸ் பாஸ்கரன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள பார்க்கிங் திரைப்படம் மக்களிடம்  நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்கங்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தத் தகவலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இயக்குநர் பகிர்ந்துள்ளார்.

மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய நாடு படக்குழுவினர்

பார்க்கிங் படக்குழுவினரைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான நாடு படக்குழுவினரும்  வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை நேரடியாக சென்று வழங்கி வருகிறார்கள். எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி உள்ளிட்ட படங்களை இயக்கிய எம் சரவணன் இந்தப் படத்தை இயக்கி, தர்ஷன் கதாநாயகனாக நடித்துள்ள நாடு திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்ற போதிலும் போதுமான கூட்டம் இல்லாத காரணத்தினால் ஒரு சில திரையரங்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. 


Michaung Cyclone: மிக்ஜாம் பாதிப்பு: உதவிக்கரம் நீட்டிய நாடு, பார்க்கிங் பட இயக்குநர்கள்!


Michaung Cyclone: மிக்ஜாம் பாதிப்பு: உதவிக்கரம் நீட்டிய நாடு, பார்க்கிங் பட இயக்குநர்கள்!

இந்நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தாம்பரம் மற்றும் முடிச்சூர் பகுதி மக்களுக்கு நாடு திரைப்படத்தின் இயக்குனர் சரவணன் மற்றும் நாயகன் தர்ஷன் ஆகியோர் நேரில் சென்று உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளனர்.

தலைப்பு செய்திகள்

கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
கவலைக்கிடமாக தமிழ் சினிமா..142 படங்கள் ரிலீஸ்..வெற்றிப்படங்கள் இவ்வளவு தானா!
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
Actress Sona: சோனா வேண்டும் என்று அடம்பிடித்த தனுஷ் அப்பா - நடந்தது என்ன?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
சினிமாவை விட்டு போவதாக சொன்ன ரஜினி...பதறிப்போன கமல் கொடுத்த அட்வைஸ் என்ன தெரியுமா?
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!
ரஜினியின் சூப்பர்ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்புகேட்ட முதல்வர் விஜய்..அட அந்த கேரக்டரா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Bajaj Pulsar N160 Variants: இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
இளசுகளை ஈர்க்கும் 4V எஞ்சின்.! பஜாஜ் பல்சர் N160-ல் எத்தனை வேரியண்ட்டுகள் இருக்கு.? எதை வாங்குவது.?
Embed widget