Pandian Stores : IVF முறையில் முல்லைக்குக் குழந்தை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் விறுவிறு மாற்றம்..
மருத்துவர் முல்லைக்கு இயற்கையான முறையில் குழந்தைப்பிறக்க வாய்ப்பில்லை எனவும், IVF முறையில் குழந்தைப்பிறக்க நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லைக்கு இயற்கையான முறையில் குழந்தைப் பெற முடியாத நிலையில் IVF முறையில் கருத்தரிக்கலாம் என மருத்துவர் தெரிவிக்கிறார். இதற்கு அதிக செலவாகும் என்பதால் வீடு கட்டும் ப்ளானைத் தள்ளிப்போடுவதாக மூர்த்தி தெரிவித்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அண்ணன், தம்பிகளை மையமாக வைத்து மட்டுமே கதைக்களம் நகர்ந்துவரும் நிலையில் கடந்த சில தினங்களாக குடும்பமே சோகத்தில் ஆழ்ந்திருப்பது போன்று கதைக்களம் நகர்கிறது. ஆம் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் மற்றும் முல்லையின் ரொமான்ஸ் சீன்களைப்பார்ப்பதற்கே ரசிகர்கள் காத்துக்கிடப்பார்கள்.
விஜே சித்ரா மறைவிற்கு பிறகு புதிய முல்லையும் அதே போன்று நடிப்பில் அசத்திவருகிறார். இந்த சூழலில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு இனி குழந்தை பிறக்காது என்ற விஷயம் மொத்த குடும்பத்திற்கும் தெரிந்து விட்டது. இதனையடுத்து வருத்தத்தில் வீட்டை விட்டு செல்லும் முல்லையைத் தேடி குடும்பத்தினர் அலைகிறார்கள். இறுதியில் குளத்திற்கு அருகில் அமைந்திருக்கும் முல்லையைப்பார்த்ததும் எமோசன் அடையும் கதிர்,“ நீ எப்படி என்னை விட்டு செல்ல துணிந்தாய் எனக்கேட்கிறார். பின்னர் வீட்டிற்கு அழைத்துவரும் முல்லையை குடும்பத்தினர் அனைவருமே சமாதானம் படுத்துகிறார்கள்.
இதனையடுத்து முல்லையின் அம்மா பார்வதி, தனத்தைப்பார்த்து முல்லை எந்த விஷேசத்தில் கலந்துக் கொண்டாலும் அங்கு வரும் சொந்தக்காரர்கள் குழந்தையைப் பற்றியே பேசுவார்கள். எப்படி முல்லை அதனை ஏற்றுக்கொள்ளப்போகிறாளோ என்றும் தயவு செய்து முல்லைக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை தருவற்கு எங்களுக்கு உதவுங்கள் என்று கேட்கிறார்.
எங்களிடம் செலவு செய்வதற்கு பணம் இல்லை என்றும் அதற்காக முல்லையை அப்படியே விட்டுவிடாதீர்கள் என்று வருத்ததத்துடன் தனத்தைப்பார்த்து கேட்கிறார். பின்னர் தனம் நிச்சயம் நாங்கள் முல்லைக்கு உதவி செய்வோம் என்று குறிப்பிடுகிறார். பின்னர் வீட்டில் நடந்த விஷயத்தைப்பற்றி ஜீவாவிடம் தெரிவிக்கிறார் மீனா.
இந்த சூழலில் முல்லையை மருத்துவரிடம் கதிர் மற்றும் தனம் அழைத்துச்செல்கிறார்கள். அப்போது, “ மருத்துவர் முல்லைக்கு இயற்கையான முறையில் குழந்தைப்பிறக்க வாய்ப்பில்லை எனவும், IVF முறையில் குழந்தைப்பிறக்க நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கிறார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பிறகு, மூர்த்தி அனைவரிடமும் முல்லையின் மருத்துவ செலவிற்கு அதிக செலவு ஆகும் என்பதால் வீடு கட்டும் ப்ளானைத் தள்ளிப்போடுவதாக தெரிவிக்கிறார். இதனைக்கேட்டவும் மீனாவும்,ஐஸ்வர்யாவும் அதிர்ச்சியாவது போன்று இந்தவார ப்ரோமோ வீடியோ முடிவடைகிறது.
இதனைப்பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இனி மேல் மீனா ஜீவாவுடன் சண்டைபோடுவதை யாராலும் தடுக்க முடியாது எனவும், கண்டிப்பாக சீரியல் முடிவதற்குள் முல்லைக்கு குழந்தைப்பிறந்துவிடும் என்பது போன்ற கமெண்ட்டுகளைப் பகிர்ந்துவருகின்றனர்