OTT Release: சூது கவ்வும் 2 முதல் அலங்கு வரை! வீக் எண்டில் OTT--யில் பார்க்க இத்தனை படங்கள் ரிலீசா?
OTT Release: ஓடிடி தளங்களில் பொங்கல் கொண்டாட்டமாக 21 படங்கள் ரிலீசாகி உள்ளது. அதன் பட்டியலை கீழே காணலாம்.

OTT Release Movies: திரையரங்குகளில் எப்படி முக்கியமான விசேஷ நாட்களில் பெரிய, பெரிய திரைப்படங்கள் வெளியாகிறதோ அதேபோல ஓடிடி தளங்களிலும் முக்கியமான நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் திரைப்படங்கள் ரிலீசாகி வருகிறது.
பொங்கல் கொண்டாட்டமாக இந்த வாரம் ஓடிடியில் ஏராளமான படங்கள் வெளியாகியுள்ளது. அமேசான், நெட்ப்ளிக்ஸ் உள்ளிட்ட ஏராளமான ஓடிடி தளங்களில் நேற்று வெளியான படங்களின் பட்டியலை கீழே காணலாம்.
ஓடிடி ரிலீஸ் படங்கள்:
1. பனி ( மலையாளம்) - சோனி லைவ்
2. ரைபிள் கிளப் (மலையாளம்) - நெட்ப்ளிக்ஸ்
3. ஃபேமிலி படம் ( தமிழ்) - ஆஹா
4. ஐ வான்ட் டு டாக் ( இந்தி) - அமேசான் ப்ரைம்
5.சூது கவ்வும் 2 ( தமிழ்) - ஆஹா
6. ஐ எம் காதலன் ( மலையாளம்) - மனோரமா மேக்ஸ்
7.ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் ( தமிழ்) - ஆஹா
8.சர்வைவ் ( ப்ரெஞ்ச்) - அமேசான் ப்ரைம்
9. தி ரோஷன்ஸ் ( இந்தி) - நெடப்ளிக்ஸ்
10. பேக் இன் ஆக்ஷன் ( ஆங்கிலம்) - நெட்ப்ளிக்ஸ்
11.பாதல் லோக் சீசன் 2 ( இந்தி) - அமேசான் ப்ரைம்
12.சிதியாஉத் ( இந்தி) - அமேசான் ப்ரைம்
13. மோக்ஷாபட்டனம் ( தெலுங்கு) - ஆஹா
14.கோல்ட் பர்ஸ்யூட் ( ஆங்கிலம்) - அமேசான் ப்ரைம்
15. கிங்டம்4 ( ஜப்பனிஸ்) - நெட்ப்ளிக்ஸ்
16.பவர் ஆஃப் பஞ்ச் ( இந்தி) - ஹாட்ஸ்டார்
17.பப்ளிக் டிசார்டர் ( இதாலியன்) - நெட்ப்ளிக்ஸ்
18. தி உமன் இன் தி வால் ( ஆங்கிலம்) - ஜியோ
19. அன்மாஸ்க்ட் ( கொரியன்) - ஹாட்ஸ்டார்
20. அலங்கு ( தமிழ்) - அமேசான்
21. ஆனந்த்ஸ்ரீபாலா (மலையாளம்) - அமேசான்
இதில் அலங்கு, சூது கவ்வும் 2, ஃபேமிலி படம் ஆகியவை நேரடி தமிழ் படங்கள். இந்த படங்கள் மட்டுமின்றி பனி, ரைபிள் கிளப், ஐ எம் காதலன் ஆகிய படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் நேரடி தமிழ் படங்கள் மட்டுமின்றி பிற மொழி படங்கள் பலவும் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.





















