Oscars 2023: நாட்டு நாட்டு முதல் எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் வரை... 24 பிரிவுகளிலும் ஆஸ்கர் வென்றோரின் முழு பட்டியல்!
மொத்தமுள்ள 24 பிரிவுகளிலும் ஆஸ்கர் விருது வென்ற திரைப்படங்கள், நபர்களின் பட்டியலைக் காணலாம்.
உலகம் முழுவதுமுள்ள திரைக் கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று காலை பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இந்தியாவுக்கு இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக அமைந்துள்ளது. சிறந்த ஆவணக் குறும்படம், சிறந்த ஒரிஜினல் சாங் என இரண்டு பிரிவுகளில் நான்கு ஆஸ்கர் விருதுகளை எம்.எம்.கீரவாணி, சந்திரபோஸ், கார்த்திகி கோன்ஸ்லேவஸ், குனீத் மோங்கா வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்நிலையில் மொத்தமுள்ள 24 பிரிவுகளிலும் ஆஸ்கர் விருது வென்ற திரைப்படங்கள், நபர்களின் பட்டியலைக் காணலாம்.
சிறந்த படம்
Everything Everywhere All at Once - டேனியல் குவான், டேனியல் ஷீனெர்ட் மற்றும் ஜொனாதன் வாங், தயாரிப்பாளர்கள் விருது பெற்றனர்.
சிறந்த இயக்குநர்
Everything Everywhere All at Once படத்துக்காக டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் வென்றனர்.
சிறந்த நடிகை
Everything Everywhere All at Once படத்துக்காக மிஷெல் இயோ வென்றனர்.
சிறந்த நடிகர்
The Whale படத்துக்காக ப்ரெண்டென் ஃப்ரேஸர் விருது வென்றார்.
சிறந்த துணை நடிகை
Everything Everywhere All at Once படத்துக்காக ஜெய்மீ லீ கர்டிஸ் விருது வென்றார்.
சிறந்த துணை நடிகர்
Everything Everywhere All at Once படத்துக்காக கி ஹ்யூ க்வோன் விருது வென்றார்.
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை
Everything Everywhere All at Once படத்துக்காக டேனியல் க்வான் மற்றும் டேனியல் ஷினெர்ட் ஆகியோர் விருது வென்றனர்.
சிறந்த தழுவல் திரைக்கதை
Women Talking படத்துக்காக சாரா போலே விருது வென்றார்.
சிறந்த எடிட்டிங்
Everything Everywhere All at Once படத்துக்காக பால் ரோஜர் விருது வென்றார்.
சிறந்த ஒரிஜினல் சாங்
ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக எம்.எம்.கீரவாணி மற்றும் சந்திரபோஸ் விருது வென்றனர்.
சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்
All Quiet on the Western Front படத்துக்காக வோல்கர் பெர்டெல்மன் விருது வென்றார்
சிறந்த அனிமேஷன் குறும்படம்
The Boy, the Mole, the Fox and the Horse படத்துக்காக சார்லி மேக்கெஸி மற்றும் மேத்யூ ஃப்ராய்ட் வென்றனர்.
சிறந்த காஸ்ட்யூம் டிசைன்
Black Panther: Wakanda Forever படத்துக்காக ரூத் இ கார்ட்டர்
மேக் அப் அண்ட் ஹேர்ஸ்டைலிங்
The Whale படத்துக்காக ஆட்ரியென் மோரோட், ஜூடி சின் மற்றும் அன்னெமேரி ப்ரேட்லி
சிறந்த ஒளிப்பதிவு
All Quiet on the Western Front படத்துக்காக ஜேம்ஸ் ஃப்ரெண்ட் வென்றார்.
லைவ் ஆக்ஷன் குறும்படம்
An Irish Goodbye பட்த்துக்காக டாம் பெர்க்லி மற்றும் ரோஸ் ஒய்ட் வென்றனர்.
விஷூவன் எஃபெக்ட் - காட்சியமைப்பு
Avatar: The Way of Water படத்துக்காக ஜோ லெட்டரி, ரிச்சர்ட் பனேஹாம், எரிக் சைண்டன் மற்றும் டேனியல் பாரெட் வென்றனர்.
சிறந்த வெளிநாட்டுப் படம்
ஜெர்மனி நாட்டுப் படமான All Quiet on the Western Front வென்றது.
சிறந்த ஒலியமைப்பு
Top Gun: Maverick படத்துக்காக மார்க் வீங்கார்டன், ஜேம்ஸ் மாதர், அல் நெல்சன், கிறிஸ் பர்டன் மற்றும் மார்க் டெய்லர் ஆகியோர் வென்றனர்.
சிறந்த ப்ரொடக்ஷன் டிசைன்
All Quiet on the Western Front படத்துக்காக கிறிஸ்டியன் எம். கோல்ட்பெக் மற்றும் எர்னஸ்டின் ஹிப்பர் ஆகியோர் வென்றனர்.
சிறந்த ஆவணப்படம்
Navalny படத்துக்காக டேனியல் ரோஹர், ஒடெசா ரே, டயான் பெக்கர், மெலனி மில்லர் மற்றும் ஷேன் போரிஸ் ஆகியோர் விருது வென்றனர்.
சிறந்த ஆவணக் குறும்படம்
The Elephant Whisperers படத்துக்காக கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கா வென்றனர்.
சிறந்த அனிமேஷன் படம்
Guillermo del Toro's Pinocchio படம் வென்றது.