Farhana Song leads : "ஓர் காதல் கனா" பாடலுக்கு கிடைத்த வரவேற்பு... ரேடியோ FM பிளே லிஸ்டில் முன்னிலை
யுவன் ஷங்கர் ராஜா வெளியிட்ட "ஃபர்ஹானா" திரைப்படத்தின் "ஓர் காதல் கனா " பாடல் தற்போது ரேடியோ FM பிளேலிஸ்டில் 4வது இடத்தில் இடம் பிடித்துள்ளது என்பதை மிகவும் சந்தோஷமாக பகிர்ந்துள்ளனர் படக்குழுவினர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் மிகவும் எதார்த்தமான முகம், திறமையான பட தேர்வு, சிறப்பான நடிப்பு என தனது புத்திசாலித்தனத்தால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திரைப்படம் "ஃபர்ஹானா".
முக்கிய கதாபாத்திரங்கள் :
இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணின் வாழ்வியலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளார். ஒரு நாள் கூத்து, மாஸ்டர் போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜித்தன் ரமேஷ், இயக்குனர் செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, கிட்டி, அனுமோல் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
View this post on Instagram
முதல் பாடலே சூப்பர் ஹிட் :
"ஃபர்ஹானா" திரைப்படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளார் கவிஞரும், எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தின் "ஓர் காதல் கனா" பாடல் அக்டோபர் 7ம் தேதி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவால் வெளியிடப்பட்டது. அட்னான் சாமி, கோல்டி சோஹல், ஹரினி இவடுரி உள்ளிட்டோர் பாடிய இப்பாடல் வரிகளை எழுதி இருந்தார் உமாதேவி. இப்பாடல் வெளியானதும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து விட்டது. மிகவும் ரம்மியமான "ஃபர்ஹானா" திரைப்படத்தின் "ஓர் காதல் கனா " பாடல் தற்போது ரேடியோ FM பிளேலிஸ்டில் 4வது இடத்தில் இடம் பிடித்துள்ளது என்பதை மிகவும் சந்தோஷமாக பகிர்ந்துள்ளனர் படக்குழுவினர். மேலும் இப்பாடலை கேட்டு இதற்கு ஆதரவை கொடுத்த அனைவரும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளனர் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த விவரம் விரைவில் வெளியாகும்.
View this post on Instagram
இப்படத்தை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் பா.கின்ஸ்லி இயக்கும் "டிரைவர் ஜமுனா" திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.