Watch Video : கீழ விழுந்தாலும் மண் ஒட்டல.. உணர்ச்சிவசப்பட்டு டான்ஸ் ஆடி, டோல் கருவிக்குள் விழுந்த ரன்வீர்.. பழைய வீடியோ வைரல்
தீபிகாவின் பாடலுக்கு ஜாலியாக நடனம் ஆடிக்கொண்டிருந்த ரன்வீர் சிங் தவறி டோல் கருவிக்குள் விழுந்த வீடியோ இணையதளத்தில் மறுபடியும் வைரலாகி வருகிறது

தீபிகா படுகோன் நடித்த ராம்லீலா பட த்தின் புகழ்பெற்ற பாடலான டோல் பாஜே பாடலுக்கு ரன்வீர் சிங் நடனமாடியபோது டோல் இசைக்கருவிக்குள் தவறிவிழுந்த பழைய காணொளி ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ரன்வீர் சிங்
இந்திய திரையுலகில் மிகப்பிரபலமானவர். பாலிவுட்டின் முன்னணி நடிகர் ரன்வீர் சிங். தனது முதல் படமான "பேண்ட் பாஜா பாராத்" என்ற முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். எப்பவுமே தனக்கென ஒரு தனி ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் கொண்டவர் ரன்வீர் சிங். ஃபேஷன், மடலிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ரன்வீர் தனது ஹேர் ஸ்டையிலையும் அவ்வப்போது மாற்றிக்கொள்வது அவரின் ஸ்பெஷாலிட்டி. எப்போதும் தன்னை சுற்றி ஒரு உற்சாகமான சூழலை உருவாக்கியபடியே இருப்பார் ரன்வீர்.
படங்களில் மட்டுமில்லாமல் இவரது உற்சாகத்திற்காகவே விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக நியமிக்கப்படுவார். அப்படியான ஒரு நிகழ்ச்சியில் மிக உற்சாகமாக பாடல் ஒன்றுக்கு மேடையில் ஆடிக்கொண்டிருந்த ரன்வீர், டோல் இசைக்கருவிக்குள் தவறி விழுந்த பழைய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இசைக்கருவிக்குள் தலைகவிழ்ந்த ரன்வீர்
எனக்கு இப்படி ஒன்னு நடந்துச்சு
— Maathevan (@Maathevan) July 24, 2023
காலேஜ் படிக்கும்போது.
Dance ஆடும்போது Back Stageலேர்ந்து ஓடி வந்து Side Entrance பக்கத்துல இருந்த Benchல ஏறி… pic.twitter.com/dqdSefXYXP
ரன்வீர் மற்றும் அவரது மனைவியான தீபிகா படுகோன் இணைந்து நடித்தப் படம் ராம்லீலா. இந்தப் படத்தில் இடம்பெற்ற டோல் பாஜே என்கிறப் பாடல் மிக புகழ்பெற்றது. இந்தப் பாடலில் தீபிகா ஆடிக்கொண்டே தனக்கு இரண்டு பக்கம் இருக்கும் டோல் என்கிற வாத்தியக் இசைக்கருவியை தட்டிக்கொண்டிருப்பார். இதே பாடலிற்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரன்வீர் அதே மாதிரி நடனம் ஆடிக்கொண்டிருந்த போது டோல் அவர் அடித்த அடியில் அந்த கருவியின் மேல்பரப்பு உடைந்து அதற்குள் தலை கவிழ்ந்து விழுந்தார் ரன்வீர்.
விழுந்த பின்னும் வெளியில் தெரியும் அவரது கால்கள் ஆடிக்கொண்டே இருப்பதைக் கண்டு அவரை தூக்கி விடவும் மறந்து அவரை சுற்றி இருந்தவர்கள் வைப் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த வீடியோ இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இணையதளத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. கீழே விழுந்தாலும் ரன்வீரின் மீசையில் மண் ஒட்டவில்லை.
ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி
தற்போது கரன் ஜோகர் இயக்கியிருக்கும் ராக்கி ஆர் ராணி கி பிரேம் கஹானி படத்தில் நடித்துள்ளார் ரன்வீர் சிங். ஆலியா பட் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

