OTT Release: நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் 90ஸ் கிட்ஸ் பேவரிட் மூவிஸ்!
மூன்று எவர்கிரீன் தமிழ் படங்கள் இந்த செப்டம்பர் மாதம் நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. 90ஸ்-களில் வெளியான இந்த தமிழ் திரைப்படங்கள், எப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் படங்கள்.
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவுக்கப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. eனினும், முன்னணி ஹீரோக்கள், பெரிய பட்ஜெட் படங்களும் கூட ஓடிடி ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் பழைய தமிழ் படங்களும் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், மூன்று எவர்கிரீன் தமிழ் படங்கள் இந்த செப்டம்பர் மாதம் நெட்ப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. 90ஸ்-களில் வெளியான இந்த தமிழ் திரைப்படங்கள், எப்போதும் ரசிகர்களின் ஃபேவரைட் படங்கள். மின்சார கனவு, அவ்வை சண்முகி, ஜீன்ஸ் என மூன்று மெகா ஹிட் திரைப்படங்கள் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் இந்த மாதம் வெளியாக உள்ளது.
1. மின்சார கனவு
1997-ம் ஆண்டு வெளியான மின்சார கனவு திரைப்படம், செம ஹிட்! இப்போதும், இப்படத்தில் வரும் பாடல்கள் ப்ளேலிஸ்டுகளில் இடம் பிடித்திருக்கும். ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் அரவிந்த் சாமி, கஜோல், பிரபுதேவா ஆகியோரது நடிப்பில் வெளியான இத்திரைப்படம் இப்போது ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் படஙக்ளில் தனி இடத்தைப் பிடித்திருக்கும் மின்சார கனவு, இனி எங்கேயும் பார்க்கலாம் எப்போதும் பார்க்கலாம் ஓடிடி தளத்தில்.
2. ஜீன்ஸ்
சங்கர் இயக்கத்தில் உருவான ஜீன்ஸ் திரைப்படம் 1998-ம் ஆண்டு வெளியானது. அப்போது ப்ளாக்பஸ்டர் ஹிட்டான இந்த திரைப்பத்தில் பிரஷாந்த், ஐஸ்வர்யா ராய், ராதிகா, நாசர், லக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கும் ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைத்திருப்பார். 90ஸ்காலக்கட்டத்தில் வெளியான திரைப்படங்களில் இப்போதும் ரசிகர்கள் பார்த்து எஞ்சாய் செய்யும் திரைப்படமான ஜீன்ஸ், நெட்ப்ளிக்ஸில் இந்த மாதம் வெளியாக உள்ளது.
All aboard the time machine... We're taking a trip back to the 90s⏳ pic.twitter.com/xsEJhSDlWq
— Netflix India South (@Netflix_INSouth) September 15, 2021
3. அவ்வை சண்முகி
1996-ம் ஆண்டு, கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான அவ்வை சண்முகி திரைப்படம் இப்போதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்போது பார்ப்பவர்களை கட்டிப்போடும் மெகா ஹிட் காமெடி திரைப்படம். கமல்ஹாசன், மீனா, ஜெமினி கனேசன் ஆகியோர் நடிப்பில், தேவா இசையமைப்பில் வெளியான அவ்வை சண்முகி தமிழ் சினிமாவில் வெளியான எவர்கிரீன் திரைப்படங்களில் ஒன்று!