![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mike Tyson in Liger: 'தெலுகுலோ மாட்லாடப் போகும் மைக் டைசன்!' - விஜய் தேவரகொண்டாவுக்கு வில்லன் ஆகிறார்!
விரைவில் அவர் கோவாவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இணைய உள்ளார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இந்தியப் படங்களில் முதன்முறையாக நடிக்க வருகிறார் மைக் டைசன்.
![Mike Tyson in Liger: 'தெலுகுலோ மாட்லாடப் போகும் மைக் டைசன்!' - விஜய் தேவரகொண்டாவுக்கு வில்லன் ஆகிறார்! Official: Former Boxer Mike Tyson to make a cameo in Vijay Deverakonda's Liger Movie Mike Tyson in Liger: 'தெலுகுலோ மாட்லாடப் போகும் மைக் டைசன்!' - விஜய் தேவரகொண்டாவுக்கு வில்லன் ஆகிறார்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/27/06f7ca441d7edbab3dc52b7c0aaa33d1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
50 முறை குத்துச்சண்டை பட்டம் வென்ற சர்வதேச குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் ‘லிகார்’ படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் இயக்குநர் பூரி ஜகன்னாத் பிறந்ததினமான இன்று இதற்கான அறிவிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
View this post on Instagram
விஜய் தேவரகொண்டா நடிப்பில் பூரி ஜகன்னாத் இயக்கத்தில் பூரி ஜகன்னாத் மற்றும் நடிகை சார்மி கௌர் இணைந்து தயாரிக்க உருவாகிவரும் படம் ’லிகார் சாலா க்ராஸ் ப்ரீட்’. பாக்ஸிங்கை மையமாக வைத்து, தெலுங்கு இந்தி என இரண்டு மொழிகளில் உருவாகிவரும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர்.கடந்த 20 ஜனவரி 2020ல் படம் தொடங்கிய நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே 15 செப்டம்பர்2021 அன்று மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. https://www.instagram.com/p/CUR-lfjsFUP/?utm_source=ig_web_copy_linkஇன்று படம் தொடர்பான சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தில் மைக் டைசனும் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் கோவாவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இணைய உள்ளார் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. இதன்மூலம் இந்தியப் படங்களில் முதன்முறையாக நடிக்க வருகிறார் மைக் டைசன்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)