Richest Tamil Actor: ரஜினி - விஜய் கூட இல்லையா? கோலிவுட்டிலேயே கோடீஸ்வர நடிகர் யார் தெரியுமா?
கோலிவுட் திரையுலகில் பணக்காரன் நடிகர் யார் என்பது பற்றிய ஒரு தகவல் தான் இப்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
கடந்த சில வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் தமிழ் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்களைக் குவித்து வருகின்றன. அதேபோல் ரஜினியின் வேட்டையனாக இருந்தாலும் சரி, விஜய்யின் கோட்டாக இருந்தாலும் சரி, தமிழைக் கடந்து தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட ரசிகர்களையும் கவர்ந்திழுக்கிறது. இந்த இருவரது படங்கள் ரசிகர்களை மட்டுமல்ல, பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் கெத்து காட்டி வருகின்றன. இருந்தாலும் கோலிவுட்டின் கோடீஸ்வர நடிகர் யார் என்று வரும் போது, ரஜினி, விஜய் இரண்டு பேரையுமே ஒரு மகா நடிகர் ஓரங்கட்டிவிடுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?. அவர் வேறு யாரும் அல்ல, உலக நாயகன் கமல் ஹாசன் தான் அது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தென்னிந்திய சினிமாவில் அபரிமிதமான பெயரும், மரியாதையும் இருந்தாலும், அவர் கோலிவுட்டின் பணக்கார நடிகர் கிடையாது. அதேபோல் இந்த விவாதத்தில் அடிக்கடி வரும் இன்னொரு பெயர் விஜய். அவருடைய சொத்து மதிப்பு 445 கோடி ரூபாயாக இருந்தாலும் அவரும் கிடையாது. தனது சொந்தப் பணத்தைக் கொட்டி புதுவிதமான கதை, டெக்னிஷியன்கள், தொழில்நுட்பத்தை கோலிவுட்டிற்கு அர்பணிந்து வரும் கமல் ஹாசன் தான், தமிழ் சினிமாவின் பணக்கார நடிகராக உள்ளார்.
கமல்ஹாசனின் சொத்து மதிப்பு 450 கோடி என டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. 1960 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதில் இருந்தே ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். 1975 ஆம் ஆண்டு நாயகனாக அறிமுகமானதில் இருந்து கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக மொத்தம் 230 படங்களுக்கு மேல் கமல் ஹாசன் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இதுவும் இவரது சொத்து மதிப்பு உயரக் காரணமாக அமைந்துள்ளது.
கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக, தமிழ் சினிமாவில் இரண்டாவது பெரிய பணக்கார நடிகர் தளபதி விஜய் ஆவார். இவருடைய சொத்து மதிப்பு ரூ. 445 கோடி என டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
பட்டியலில் அடுத்த இடத்தில் ரஜினிகாந்த் உள்ளார், அவர் 430 கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ளதாக கூறப்படுகிறது. எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட தகவலின் படி, தலைவர் நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் படத்திற்காக ரூ 210 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.