மேலும் அறிய

Nivetha Pethuraj | லேடி ‛தல’ ஆனார் நிவேதா பெத்துராஜ்!

நடிகை நிவேதா பெத்துராஜ் பார்முலா கார் ரேஸ் பயிற்சியை முடித்துள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தமிழில் ஒரு நாள் கூத்து, பொதுவாக எம்மனசு தங்கம், 'டிக்,டிக்,டிக்', திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்களில்  நடித்துள்ளார். இவர் தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.  திரையில் கலக்கி வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், நிஜ வாழ்கையிலும் சாகச நாயகி என நிரூபித்திருக்கிறார்.  அவர் இப்போது பார்முலா கார் ரேஸ் பயிற்சியை முடித்துள்ளார்.

“Momentum – School of Advance Racing” பள்ளியில் கலந்துகொண்டு பார்முலா  பயிற்சி லெவல் 1ஐ முடித்திருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. ரேஸ் காரில் அமர்ந்துகொண்டு அதை இயக்குவதைக் குறித்து கற்றுள்ளார். இது குறித்து தெரிவித்த நிவேதா, ''கார்களின் மீதான காதல், பள்ளிக்கு சென்ற சிறுவயதிலேயே ஆரம்பித்துவிட்டது. நான் 8வது படித்துகொண்டிருக்கும் போது எங்கள் வீட்டின் அருகில் வசித்த எனது அத்தை ஒருவர் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கினார்கள். அப்போதிலிருந்தே ஸ்போர்ட்ஸ் கார் மீது தீவிர ஆர்வமும், வேட்கையும் என்னுள் உருவாகிவிட்டது.

Nivetha Pethuraj | லேடி ‛தல’ ஆனார் நிவேதா பெத்துராஜ்!

என்னுள் பல வருடங்களாக நீடித்திருந்த இந்த வேட்கையில் 2015 ல்  “Dodge Challenger”  ஸ்போர்ட்ஸ் காரை மிக ஆசையுடன் வாங்கினேன். UAE  நாட்டில் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கிய இரண்டாவது பெண் நான் தான். ஆனால் இந்த காரில் மிக வேகமாக போக்கக்கூடிய  V6 எஞ்சின் இருந்ததை,  எனது தந்தை  விரும்பவில்லை. ஆனால் நான்  மிக நம்பிக்கயுடனும், உறுதியுடனும் அந்த காரை ஓட்டினேன். அது மிக அற்புத அனுபவமாக இருந்தது. அதைத்தொடர்ந்து துபாயில், F1, மற்றும்  லெக்செஸ், ரோல்ஸ் ராய்ஸ், செவர்லெட் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் கலந்துகொள்ளும் துபாய் மோட்டார் ஷோஸ் க்களில் கலந்துகொண்டு வேலை செய்தேன். 

இது கார்களின் மீதான எனது காதலை இன்னும் அதிகமாக்கியது. நான் சென்னை வந்த பிறகு, சென்னையில் சில மோட்டார் ட்ராக்ஸ்களை சென்று பார்வையிட்டேன். ஆனால் அப்போது ஒரு போதும், நானும் ரேஸ் டிராக்கில் கார் ஒட்டுவேன் என நினைத்து பார்க்கவில்லை. ஒரு விளம்பர நிகழ்வை ஒட்டி BMW நிறுவனம் நடத்திய,  அந்த வார சிறப்பு காரை ஓட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட போது கார்களின் மீதான காதல் என்னுள் மீண்டும் துளிர்த்தது. 

Nivetha Pethuraj | லேடி ‛தல’ ஆனார் நிவேதா பெத்துராஜ்!

கோயம்புத்தூரில் உள்ள Momentum  - School of Advance Racing கிற்கு எனது சகோதரருடன் சென்ற போது,  அவர்கள் அளிக்கும் பயிற்சியை, என்னால் முடிக்க முடியுமா ?, எனும் பயம் என்னுள் உருவானது. கார்களின் மீதான காதல் மற்றும் ஆர்வத்தால் மூன்று மாதம் முன்னதாகவே பயிற்சியில் சேர்ந்தேன் ஒவ்வொரு பயிற்சி வகுப்பிலும் 8 பேர் கலந்துகொள்வார்கள் அதில் ஒரே பெண் நான் தான்.ட்ராக்கில் கலந்துகொண்ட அனுபவம் இருந்ததால் கார் ஓட்டும்போது  எனக்கு நம்பிக்கை கூடியது. முடிவில் காரை ஓட்டி முடிக்கும் எனது லேப் டைமிங்க்ஸ் என்னுடன் கார் ஓட்டிய ஆண்களுக்கு இணையாக இருந்தது. இது ரேஸ் என்பது ஆண்களுக்கானது மட்டுமல்ல பெண்களுக்கும் தான் என்கிற  மிகப்பெரிய தன்னம்பிக்கையை எனக்கு அளித்தது. நாகரீகம் இவ்வளவு முன்னேறிய காலத்திலும் பெண்களுக்கான  Formula 1 மற்றும் Formula 2 championships  நடத்தப்படுவதில்லை. விரைவில் பெண்களுக்கான முறையான கார் பந்தயங்கள் நடைபெறும் என நம்புகிறேன் என்றார்.

Nivetha Pethuraj | லேடி ‛தல’ ஆனார் நிவேதா பெத்துராஜ்!

சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு ''பல  சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ள, இப்போதே அழைப்பு வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதற்காக ட்ராக் பயிற்சியில் ஈடுபட நிறைய முதலீடும் அர்ப்பணிப்பும், உழைப்பும் தேவைப்படும். திரையுலகில் நான் பிரபலமாக இருப்பதால் ஸ்பான்சர் பெறுவது மிக எளிது. மிக அதிக பணம் தேவைப்படும் போட்டி இது. ஒவ்வொரு போட்டிக்கும் 15 லட்சம் வரை பணம் தேவைப்படும். ஆதலால் நான் முழுதாக தயாரானபிறகு நான் ஆசைப்பட்டால் மட்டுமே கலந்துகொள்வேன். இப்போதைக்கு எனது முழு விருப்பமும் அடுத்தடுத்த நிலைகளில் உள்ள பயிற்சியை முடிக்க வேண்டும்'' என்பது தான் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!கோதாவில் இறங்கிய அமைச்சர்  VOLLEYBALL ஆடிய செ.பாலாஜி  CHEER செய்த மாணவர்கள்மாணவி கொடுத்த HINT.. சிக்கிய ஞானசேகரன் கூட்டாளி!  திருப்பூர் விரையும் போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Embed widget