யோகிபாபுவிற்கு சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் கொடுத்த பிறந்த நாள் பரிசு ! - இணையத்தை கலக்கும் புகைப்படம்!
நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது குணச்சித்திர நடிகராகவும் கலக்கி வருபவர் நடிகர் யோகி பாபு.
பிரபல சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான அருள் தற்போது திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். தானே தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களை இயக்கி வந்த ஜேடி - ஜெர்ரி இந்தப் படத்தை இயக்குகின்றனர். முன்னதாக உல்லாசம், விசில் படங்களை இவர்கள் இயக்கியிருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் நடைபெற்று வருகிறது. யோகி பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு செட்டில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் அண்ணாச்சியும் கலந்துக்கொண்டார். இந்த விசிட் யோகிபாபுவிற்கு சர்ப்ரைஸ் விசிட்டாம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் தனது மகனுக்கும் எளிமையாக பெயர் சூட்டு விழாவை நடத்தி விசாகன் என பெயர் வைத்திருந்தார் யோகி பாபு. தற்போது சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளருடன் உருவாகி வரும் இந்த புதிய படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் விவேக்கை படக்குழு ஒப்பந்தம் செய்ததாகவும், அவர் சமீபத்தில் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதால் அந்த கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆனாலும் இது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைக்கவில்லை.
யோகி பாபு கதாநாயகநாக நடித்து வெளிவந்த படம் மண்டேலா. இந்த படம் பரவலாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த 25 படங்களில் 17 வது இடத்தை பிடித்தது. இந்த படத்தின் 100 நாள் வெற்றி கொண்டாட்டமும் சமீபத்தில் நடைப்பெற்றது. தற்போது பல முக்கிய நடிகர்களின் படங்களிலும் யோகி பாபு நடித்து வருகிறார். அஜித்தின் வலிமை, நடிகர் விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட படங்களிலும் யோகிபாபு நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது குணச்சித்திர நடிகராகவும் கலக்கி வருகிறார் யோகி பாபு. தற்போது சமுத்திரக்கனி நடிக்கும் “யாவரும் வல்லவரே” படத்தில் யோகிபாபு நடித்து வருகிறார். இந்த படத்தை என்.ஏ.ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்குகிறார். படத்தை பிரபு திலக் வழங்க, ஆனந்த் ஜோசப் ராஜ் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ரித்விகா, நான் கடவுள் ராஜேந்திரன், ரமேஷ் திலக், இளவரசு, போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஜெய்ஸ் கமிட்டாகியுள்ளார்.இசையமைப்பாளராக என்.ஆர்.ரகுநந்தன் இணைந்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. தமிழ் திரையுலகில் தற்போது பிஸியாக நடித்து வரும் நடிகராக யோகிபாபு மாறியிருக்கிறார்.பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான “லொள்ளு சபாவில் “உதவி இயக்குநராக பணிபுருந்தவர் யோகிபாபு.அதன் பிறகு யோகி என்ற திரைப்படம் மூலமாக சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி இன்று பட்டித்தொட்டியெல்லாம் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.