கலாச்சார சீரழிவு... கூச்சமே இல்லாமல் காமசூத்ராவை நடித்து காட்டிய ஜோடிகள்! ஓடிடி நிகழ்ச்சிக்கு குவியும் கண்டனம்!
நமது சமூகத்திற்கும், கலாச்சாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையில், ஒளிபரப்பாகி வரும் 'ஹவுஸ் அரெஸ்ட்' என்ற ரியாலிட்டி ஷோவின் புரோமோ வெளியாகி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

TRP ரேட்டிங், மற்றும் பார்வையாளர்களை கவர வேண்டும் என்பதற்காக நாளுக்கு நாள் திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வரும் நிலையில், வெப் சீரிஸ், மற்றும் வித்தியாசமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஓடிடியில் வெளியாகும் நிகழ்ச்சிகள் மற்றும் படங்களுக்கு தணிகை இல்லை என்பதால், ஆபாசம் எல்லை மீறுவதாகவும் சில பேச்சுகள் அடிபட்டு வந்தது. இதை உண்மையாகும் விதத்தில், Ullu என்ற ஓடிடி பிளாட்பார்மில் ஹவுஸ் அரெஸ்ட் (Arrest House) என்ற ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகி இருக்கிறது.
இந்த ரியாலிட்டி ஷோவில், இந்தியாவில் உள்ள ஆண்களும் - பெண்களும் வெளிப்படையாக பேச தயங்கும் (காமசூத்திரா) பற்றி சில இளம் பெண்கள் மற்றும் ஆண்களிடம் தொகுப்பாளர் கேட்க, அவர்கள் சர்ச்சைக்குரிய விதத்தில் நடித்து காட்டியதும், கொடுத்த ரியாக்ஷனும் தான் இப்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்த நிகழ்ச்சியை, பிக்பாஸ் பிரபலம் அஜாஸ் கான் தொகுத்து வழங்க, ஆபா பால், முஸ்கன் அகர்வால், லீனா சிங், சிம்ரன் கவுர், ரிது ராய், நைனா சாப்ரா, ஹுமேரா ஷேக், கெஹ்னா வஷிஷ்ட், சரிகா சலுங்கே உள்ளிட்ட 3 ஆண்களும், 9 பெண்களும் கலந்துக் கொண்டுள்ளனர். இதில் கலந்து கொண்ட சரிகா சலுங்கே, நைனா சாப்ரா மற்றும் முஸ்கான் அகர்வால் போன்ற உல்லுவின் சிறந்த நடிகைகள் முதல் பிரபலமான யூடியூபர்கள் மற்றும் சோஷியல் மீடியா பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஷோ கிட்டத்தட்ட ஒரு பிக்பாஸ் நிகழ்ச்சி போல் ஒளிபரப்பாகி வருகிறது. 12 போட்டியாளர்கள் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு டாஸ்க்கையும் செய்ய அவர்கள் வேண்டும். ஆபாசமான காதல் காட்சிகள், நாடகம், சண்டைக் காட்சிகள், த்ரில்லர் காட்சிகள் என்று எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கும் வகையில் இந்த ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் தான் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கும் ஹவுஸ் அரெஸ்ட் என்ற ரியாலிட்டி ஷோவின் புரோமோ வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த புரோமோவில் அஜாஸ் கான், நடிகை நைனா சாப்ராவிடம் காமசூத்ராவைப் பற்றி கேள்வி எழுப்புகிறார். அதற்கு நைனா தனக்கு அதில் எந்த ஒரு அனுபவமும் இல்லை, ஆனால் அதில் சில பொசிஷன்கள் உள்ளது என கேள்விபட்டுருக்கிறேன் என கூறி இருந்தார். இது பற்றி ஒரு சிறு விளக்கமும் கொடுத்திருந்தார்.
இதன் பின்னர் அஜாஸ் கான் 2 ஜோடியை கூப்பிட்டு அவர்களிடம் காமசூத்திரா பற்றி கேட்க, அந்த இரண்டு ஜோடிகளும் சற்றும் கூச்சம் இல்லாமல் நடித்தும் காட்டி உள்ளனர். தற்போது இதுபோன்ற கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என பலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். OTT தளங்களில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் சென்சார் வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.





















