மேலும் அறிய

Top Tamil Directors: "களத்துல நாங்கதான் பெரிய ஆளு" இவர்கள்தான் 2023 ஆண்டின் டாப் தமிழ் இயக்குநர்கள்!

2023 ஆம் ஆண்டின் டாப் 5 தமிழ் இயக்குநர்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

2023 ஆம் ஆண்டு பல புதிய இயக்குநர்கள் சிறந்தப் படங்களை கொடுத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்கள். இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் டாப் 5 இயக்குநர்களின் பட்டியல் இது.

5. ஆதிக் ரவிச்சந்திரன்

Top Tamil Directors:

ஆதிக் ரவிச்சந்திரன் இளைஞர்களை கவரும் வகையிலான படங்களை தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறார். த்ரிஷா இல்லனா நயன்தாரா வெற்றி பெற்றது என்றால் AAA , பகீரா போன்ற படங்கள் வந்த மாயம் தெரியாமல் மறைந்து போயின. சரியான நேரத்தில் மார்க் ஆண்டனி என்கிற படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் ஆதிக் . விஷால் , எஸ்.ஜே.சூரியா  நடித்து வெளியான இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப் பட்டது மட்டுமில்லாமல் 100 கோடி வசூலும் ஈட்டியது. விஷால் நடித்து இவ்வளவு பெரிய வசூல் ஈட்டிய முதல் படம் இது என்பது குறிப்பிடத் தக்கது. இந்த பட்டியலில் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன்

4. அ வினோத்

Top Tamil Directors:

தமிழ் சினிமாவில்  நம்பிக்கை அளிக்கும் இயக்குநர்கள் வெகு சிலரே. அப்படியான ஒரு படைப்பாளி அ வினோத். சிறிய பட்ஜட் படங்களை எடுக்கும்போது சிறப்பாக வெளிப்படும் அ வினோத் அவர்களின் படைப்பாற்றல் கமர்சியல் ரீதியாக பெரிய வெற்றிகளைக் கொடுக்க தடுமாறினதான். வலிமை படம் இதற்கு ஒரு உதாரணம் . ஒரு ஸ்டார் நடிகரை வைத்து இயக்கிய படம் தோல்வியடைந்தால் மனம் சோராமல் அடுத்ததாக துணிவு என்கிற படத்தின் மூலம் கம்பேக் அடித்த அ வினோத் இந்த வரிசையில் 4 ஆவது இடத்தை பிடித்துள்ளார்

3. மணிரத்னம்

Top Tamil Directors:

தமிழ் சினிமாவின் முன்னோடி இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம் . ஆனால் பட்ஜெட், பாக்ஸ் ஆஃபிஸ் , பான் இந்தியா என்று இந்திய சினிமா  நகர்ந்துகொண்டிருக்கும் போது மணிரத்னம் கொஞ்சம் சவாலை எதிர்கொள்கிறார் தான். கடந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய பொன்னியின் செல்வன் முதல் பாகத்தைப் அதன் இரண்டாம் பாகம் வெற்றிகரமாக அமையவில்லை. பொன்னியின் செல்வன் 2 கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாகவும் பின் தங்கியது. இதனால் மணி ரத்னம் இந்த பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளார்

2. லோகேஷ் கனகராஜ்

Top Tamil Directors:

லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் இந்த ஆண்டு அதிக வசூல் ஈட்டிய படமாக அமைந்தது. ஆனால் விமர்சன ரீதியாக லியோ திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததன் காரணமாக இந்த ஆண்டு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார் லோகேஷ்.

1. நெல்சன் திலீப்குமார்

Top Tamil Directors:

பீஸ்ட் படத்தின் தோல்விக்குப் பிறகு சமூக வலைதளங்களில் எந்த அளவிற்கு நெல்சன் வசைபாடப் பட்டான் என்று நமக்கு தெரியும். தன்னை திட்டிய அனைவரையும் ஜெயிலர் படத்தின் மூலம் சைலண்டாக்கினா நெல்சன் திலிப்குமார். அவரது வெற்றியை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் கொண்டாடியது என்றால் மிகையல்ல.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கைதாகுகிறாரா சீமான்? 2 நாள் ஜெயில்தான்.! ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!
கைதாகுகிறாரா சீமான்? 2 நாள் ஜெயில்தான்.! ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Champions Trophy: ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா.. ஆப்கானை துரத்தும் பேட் லக்!
ஆப்கானை துரத்தும் பேட் லக்.. ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman Angry on Vijayalakshmi | PMK vs VCK Fight: ”அடிதடி , களேபரம்” ராமதாஸ் வீட்டுமுன் நடனம்! விசிக - பாமக மோதல்!Kaliammal in ADMK: அதிமுகவில் காளியம்மாள்? EPS கொடுத்த அதிரடி OFFER.. விஜயபாஸ்கர் பக்கா ஸ்கெட்ச்Vijayalakshmi Seeman Case: விஜயலட்சுமி பாலியல் வழக்கு! நேரில் ஆஜராகாத சீமான்! நெருக்கும் காவல்துறை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கைதாகுகிறாரா சீமான்? 2 நாள் ஜெயில்தான்.! ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!
கைதாகுகிறாரா சீமான்? 2 நாள் ஜெயில்தான்.! ஸ்கெட்ச் போட்ட வளசரவாக்கம் போலீஸ்.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Alagiri - Stalin: முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சகோதரர் மு.க.அழகிரி..அதிரும் திமுக.!
Champions Trophy: ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா.. ஆப்கானை துரத்தும் பேட் லக்!
ஆப்கானை துரத்தும் பேட் லக்.. ஜெயிக்காமல் செமி பைனல் சென்ற ஆஸ்திரேலியா!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
அனுபவம் தேவையில்லை, கல்லூரி முக்கியமில்லை- ஆண்டுக்கு ரூ.40 லட்சம் ஊதியம்- அழைக்கும் பெங்களூரு ஸ்டார்ட் அப்!
Seeman:
"திமிர் பிடித்த சீமானே.. பெண்கள்னா கேவலமா..?" பேட்டியால் கெட்ட சீமான்
"நாட்டை விட்டு வெளியேத்துங்க" டிரம்ப் ஸ்டைலில் சட்டவிரோத குடியேறிகளுக்கு குறி வைத்த அமித் ஷா
Seeman: விஜய் டயலாக்கை பேசிய சீமான்.! “அந்த பயம் இருக்கணும் “..கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை.!
விஜய் டயலாக்கை பேசிய சீமான்.! “அந்த பயம் இருக்கணும் “..கைதுக்கு பயப்படும் ஆள் நான் இல்லை.!
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
உங்கள் இளமைக்கால சினிமா கனவுகளுக்கு பலிகடா, தமிழக மக்களா.? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி...
Embed widget