(Source: ECI/ABP News/ABP Majha)
Nayanthara Wedding Red Saree : லஷ்மி மோப்பு.. கோவில் பிரகார ஓவியம்.. நயன், சிவன் பேரு.. ஜொலித்த கல்யாணப்புடவையின் சீக்ரெட்ஸ் இவைதான்
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று நடந்துமுடிந்தது. திருமணத்தில் நயன்தாரா சிவப்பு வண்ண புடவையில் ஜொலித்தார்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் நேற்று நடந்துமுடிந்தது. திருமணத்தில் நயன்தாரா சிவப்பு வண்ண புடவையில் ஜொலித்தார். அந்த சேலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவனின் பெயர்கள் இழைக்கப்பட்டுள்ளது.
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா
பூமி தொடா பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் நாணம்..
என்று வியந்துபாடும் அளவுக்கு அழகாகக் காட்சியளித்தார். அவரது ஆடை பிரியங்கா சோப்ரா திருமண ஆடைபோல் இருப்பதாக சிலர் விமர்சனம் செய்தாலும் கூட நயனின் திருமண உடை க்ளாஸாகவே இருந்தது. அந்த ஆடை தெரிவு தொடங்கி அதன் நுணுக்கங்கள் வரை பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.
‛தங்கமே உன்ன தான் தேடி வந்தேன் நானே...’ என, நயன்தாராவை பார்த்து விஜய்சேதுபதி டூயட் பாடியிருந்தாலும், ஒரிஜினல் டூயட்டிற்கு சொந்தக்காரர் விக்னேஷ் சிவன் தான். நயன்தாராவிற்கு சில காதல் அனுபவம் இருந்திருந்தாலும், அவர் அன்பை பெற்றவர், விக்கி என்று அழைக்கப்படும் விக்னேஷ் சிவன் தான். நீண்ட... ஆண்டுகள் காதல் உறவாடிய நயன்-சிவன் ஜோடி திருமணம் செய்துகொண்டனர்.
நயன் சேலையின் டீட்டெய்ல்ஸ்:
வெர்மிலியான் ரெட் எனப்படும் குங்குமச் சிவப்பு நிற சேலையை அணிந்திருந்தார் நயன், இதை மோனிகா ஷா என்ற ஆடை வடிவமைப்பாளர் தயார் செய்திருந்தார். ஜேட் என்ற ஃபேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஆரம்பம் முதலே தனது திருமண ஆடை பாரம்பரிய ஆடையாக இருந்தாலும் அது நவநாகரிக உலகிற்கே ஏற்ற சில டிரெண்டுகளையும் கொண்டிருக்க வேண்டும் என்று மோனிகா ஷாவிடம் கூறியிருந்தார். முதலில் அவர் நிறத்தை உறுதி செய்தார். அதன் பின்னர் ஆடை சுமப்பதற்கு பாரமாக இருக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார். அதன்படி மோனிகா ஷா சிவப்பு நிற சேலையை வடிவமைத்தார். அதன் முந்தானையை சற்று நீளமாக வடிவமைத்தார். அதை தேவைப்பட்டால் முக்காடு போலும் போர்த்திக் கொள்ளும் வகையில் வடிவமைத்திருந்தார். இதனால் அந்த ஆடைக்கு மிடுக்கான தோற்றம் வந்தது.
பிளவுஸிலும் பல சிறப்புகளை புகுத்தினார் மோனிகா ஷா. கைகளில் லஷ்ஷ்மி தேவி சின்னங்களை இழைத்தார். வளம், அதிர்ஷ்டத்தின் குறியீடாக அது சேர்க்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் ஆடையில் நயன், விக்கியின் பெயர்களையும் இழைத்திருந்தார் மோனிகா ஷா. இது இருவருக்கும் இடையேயான பந்தத்தையும், பரஸ்பர மரியாதையையும் வெளிப்படுத்தும் வகையில் செய்யப்பட்டதாகக் கூறினார்.
வேட்டி சட்டையில் விக்னேஷ் சிவன்:
விக்னேஷ் சிவனின் ஆடையையும் பாரம்பரியத்தை ஒத்து வடிவமைத்தனர். வேட்டி, சட்டை இரண்டுமே பட்டால் ஆனது என பார்த்துப் பார்த்துப் தயாரிக்கப்பட்டது. அதேபோல் துண்டில் கையால் எம்ப்ராய்டரி போடப்பட்டு உருவாக்கப்பட்டது. ஏக் டார் எம்ப்ராய்டரி என்ற பிரத்யேக எம்ப்ராய்டரி டிசைன் செய்யப்பட்டது. இதையும் ஜேட் ஃபேஷன் நிறுவனமே தயாரித்தது. நயன்தாரா, விக்ஜனேஷ் சிவன் திருமண புகைப்படங்கள் சில விக்கியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
ஆழியில் அலசி எடுத்த இணைதான்..