Watch Video: தொடாதீங்க.. ஃபோனை உடைச்சிருவேன்.. டென்ஷனான நயன்தாரா.. வைரலாகும் வீடியோ
காமாட்சி அம்மன் கோயில் வழிபாட்டை முடித்துவிட்ட நயன்தாரா - விக்னேஷ்சிவன் ஜோடி, ஐராதீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் சமீபத்தில் அவர்களது குல தெய்வ கோவிலுக்கு சென்றது சமூக வலைதளங்களில் வைரலானது. கடந்த 4ம் தேதி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் கும்பகோணம் அடுத்த மேல்வழுத்தூர் கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை காமாட்சி அம்மன் ஆலயத்துக்கு சென்றனர்.
அப்போது, நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் தங்களது ஊருக்கு வருவதை அறிந்த ஊர் தலைவர்கள், பொன்னாடையுடன் அவர்களை வரவேற்க காத்திருந்தனர். கோயிலுக்கு வந்த நயன்தாரா அந்த பொன்னாடையை வாங்க மறுத்துவிட்டார்.
நயன்தாரா சாமி கும்பிட வருவதை அறிந்த ஊர் மக்கள் கோயிலுக்குள் அவரை பார்க்க படையெடுத்தனர். அந்த கோயிலானது சிறிய கோயில் என்பதால் கூட்டம் நெரிசல் அதிகமானது. இதையடுத்து, தவலறிந்து வந்த காவல்துறையினர் நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளித்தனர்.
அந்த நேரத்தில் செய்தியாளர்கள் வந்து நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவனிடம் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த நயன்தாரா காவல்துறையினரின் உதவியுடன் கோயிலுக்கு வெளியே அனுப்பிவிட்டார்.
தொடர்ந்து, காமாட்சி அம்மன் கோயில் வழிபாட்டை முடித்துவிட்ட நயன்தாரா - விக்னேஷ்சிவன் ஜோடி, ஐராதீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.
Romba cheap eecha character iva 💦
— Saala Nee Yaruda (@kamaleshjisettu) April 6, 2023
#WorstBehaviourNayanthara#Nayanthara pic.twitter.com/OFYhxRVPqc
கோயிலுக்கு வெளியே வந்தபோது அங்கிருந்த மக்களை பார்த்து நயன்தாரா கையசைத்துள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களும் தங்களது பணியை மறந்து புகைப்படம் எடுக்க முயற்சித்தாகவும் கூறப்படுகிறது. இவ்வளவு பாதுகாப்பையும் மீறி கல்லூரி பெண் ஒருவர், கூட்டத்திற்கு நடுவே நயன்தாராவின் தோளைத் தொட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நயன், ’தொடாதீங்க. இது தவறானது’ என்று அட்வைஸ் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து, திருச்சி ரயில் நிலையம் வந்த நயன்தாராவை காண ஏராளமானோர் கூடினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. கூட்டத்திற்கு நடுவில் நயன்தாரா - விக்னேஷ்சிவன் ஜோடி ரயிலில் ஏறியபோது, அங்கிருந்த ரசிகர் ஒருவர் தொடர்ந்து அவரை செல்போனின் படம் எடுத்துள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த நயன்தாரா, ”தி இஸ் தே லிமிட்.. என்னை படம் எடுக்காதீர்கள்.. மீறி எடுத்தால் செல்போனை உடைத்துவிடுவேன்” என எச்சரித்துள்ளார்.