மேலும் அறிய

Nayan Vicky Love Story: விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம்: முதல் சந்திப்பு முதல் திருமண அறிவிப்பு வரை… ஒரு பார்வை!

இவர்களின் காதல் திருமணம் ஜூன் 9 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள நிலையில் அவர்களது காதல் எப்படி மலர்ந்தது, முதலில் சந்தித்தது எங்கே, என்பதையெல்லாம் பார்க்கலாம்.

பிரபல நடிகை நயன்தாரா - பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் காதல் திருமணம் மாமல்லபுரத்தில் ஜூன் 9 அன்று நடைபெறவுள்ளது. நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியானது. இயக்குநர் விக்‌ஷேன் சிவன் லால்குடியைச் சேர்ந்தவர். நயன்தாரா கேரளாவைச் சேர்ந்தவர். இவர்களின் காதல் திருமணம் ஜூன் 9 அன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள நிலையில் அவர்களது காதல் எப்படி மலர்ந்தது, முதலில் சந்தித்தது எங்கே, என்பதையெல்லாம் பார்க்கலாம்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

நானும் ரவுடிதான்

நயன்தாராவை முதல் முதலில் விக்னேஷ் சிவன் பார்த்ததே நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு கதை சொல்ல போகும்போதுதான். அதன் பிறகு படப்பிடிப்பில்தான் இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி உருவாகி காதலாக மாறியது. ஆனால் அந்த நேரத்தில் அதை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தனர். படத்தின் ஹீரோ விஜய் சேதுபதிக்கே அப்போது தெரியாது என்று கூறியிருந்தார். அதனை முதன் முதலில் ஸ்டேஜில் போட்டுக் கொடுத்தது, மன்சூர் அலி கான் தான். பட விழாவில் பேசிய அவர், "உச்சி வெயிலில் நானெல்லாம் நாலு அஞ்சு பிஸ்லேரி பாட்டில காலி பண்ணிட்டு இருப்பேன். அங்க ரெண்டு சிட்டுக் குருவிகள் உக்காந்து மணிக்கணக்கா பேசிக்கிட்டு இருக்கும்" என்று கூற விக்னேஷ் சிவன் உட்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அதன் பிறகுதான் கிசு கிசுவெல்லாம் எழுத ஆரம்பித்தார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிங்கப்பூரில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில்தான் கிட்டத்தட்ட இருவரும் வெளிப்படையாக ஒருவரை ஒருவர் பற்றி பேசிக்கொண்டார்கள். விக்னேஷ் சிவன் சிறந்த இயக்குனர் விருது வாங்கியபோது, நயன்தாராவுக்கு நன்றி சொல்லி, அவரை சிறந்த மனிதர் என்று கூறினார். நயன்தாரா விருது வாங்கும்போதும் விக்னேஷ் சிவனுக்கு நன்றி கூறினார். இருவர் பேசும்போதும் இடைப்பட்ட மிர்ச்சி சிவா, இருவர் காதல் குறித்தும் வெளிப்படையாக கலாய்த்தார். இருவருமே அதனை நல்ல முறையில் எதிர்கொண்டதே இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததற்கு சமமாக பார்க்கப்பட்டது.

கொண்டாட்டங்கள்

நயன்தாரா சமூக வலைத்தளங்களில் இல்லை, ஆனால் விக்னேஷ் சிவன் எப்போதும் அவருடைய புகைப்படங்களை பதிவிட்டுக்கொண்டே இருப்பார். இருவரும் சேர்ந்து எடுத்த செல்பி, புகைப்படங்கள் என வந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமின்றி ஓணம் கொண்டாடுவது முதல், ஒருவர் மற்றவருடைய பிறந்த நாளுக்கு பிறந்தநாள் பார்ட்டிக்களை அரேஞ் செய்வது என்று அவர்களது கொண்டாட்டங்கள் ஒன்றாக அமைய தொடங்கின. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், அடிக்கடி இந்தியா முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள், சர்ச்களுக்கு செல்வதை பழக்கமாக வைத்திருந்தனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

நிச்சயதார்த்தம்

மார்ச் 25, 2021 இல் விக்னேஷ் சிவன் ஒரு புகைப்படம் பதிவிட, அது பெரும் சலசலப்பை கிளப்பியது. அந்த புகைப்படத்தில், நயன்தாரா அவரது மோதிர விரலில் ஒரு மோதிரம் போட்டிருந்தார். அந்த மோதிரம் குறித்த எந்த அறிவிப்பையும் இருவருமே வெளியிடவில்லை. அது குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், விஜய் டிவியில் டிடி நடத்திய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா என்ற நிகழ்ச்சியில் விடை கிடைத்தது.

அந்த கேள்விக்கு பதிலளித்த அவர், "கல்யாணம் நடந்தா கண்டிப்பா சொல்லுவோம், எல்லாருக்கும் சொல்லி செய்யுறதுதான் கல்யாணம். அது நிச்சயதார்த்த மோதிரம். ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது, அது ஒரு குடும்ப விழா என்பதால் ஒரு பெரிய அறிவிப்பதாக சொல்லவில்லை. மற்றபடி கல்யாணம் கண்டிப்பாக எல்லோருக்கும் சொல்லிதான் நடக்கும்" என்றார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

ரகசிய திருமணம்

விக்னேஷ் சிவன் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார், அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு ரகசிய திருமணம் ஆகிவிட்டது என்று சந்தேகித்தனர். அதற்கு காரணம் அந்த புகைப்படத்தில் நயன்தாரா மேல் நெற்றில் முடியை ஒட்டி குங்குமம் வைத்திருந்தார். தமிழ் பாரம்பரியப்படி மேல் நெற்றியில் திருமணம் ஆனவர்கள் தான் போட்டு வைப்பார்கள் என்பதால், அவர்களுக்கு ரகசியமாக திருமணம் முடிந்துவிட்டது என்ற புரளியை கிளப்பி விட்டனர்.

Nayan Vicky Love Story: விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம்: முதல் சந்திப்பு முதல் திருமண அறிவிப்பு வரை… ஒரு பார்வை!

அதிகாரப்பூர்வ திருமணம்

நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற கேள்வி நாளுக்கு நாள் அதிகரிக்க, காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது. அந்த படம் பெரிய ஹிட் ஆக, இவர்களது திருமணத்திற்கான எதிர்பார்ப்பும் கூடியது. அப்போதுதான் இருவரும் தங்களது திருமண தேதியை அறிவித்தனர். ஜூன் 9 ஆம் தேதி திருப்பதியில் நடைபெறும் என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது மஹாபலிபுரத்திற்கு மாற்றி உள்ளனர். ஜூன் 11 ஆம் தேதி முதன் முதலாக ரசிகர்களை கணவன் மனைவியாக சந்திக்கிறார்கள். ரசிகர்களும் அவர்களை கணவன் மனைவியாக காண ஆவலோடு காத்திருக்கின்றனர். 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget