Nayanthara : எந்தெந்த துறைகளில், எப்படி முதலீடு செய்திருக்கிறார்? பிசினஸிலும் நயன்தாரா சூப்பர்ஸ்டார்தான்..
சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் துபாய் சென்றதற்கான நோக்கம் இந்த வணிக திட்டம்தான் என்கின்றனர் சிலர்.
துபாய் எண்ணெய் வணிகம் :
லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நயன்தாராவிற்கு தென்னிந்திய சினிமா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக அறியப்படும் நயன்தான் தற்போது அதிகப்படியாக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.நயன்தாரா சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிகள் தற்போது பார்சிலோனாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ஏற்கனவே பல வணிகங்களில் முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில் அவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட ஒரு புதிய எண்ணெய் வணிகத்தில் முதலீடு செய்ய இருப்பதாகவும் அதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக கிட்டத்தட்ட சுமார் 70 முதல் 100 கோடி ரூபாய் வரை அவர் ஒதுக்கியுள்ளார் என கூறப்படுகிறது. சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் துபாய் சென்றதற்கான நோக்கம் இந்த வணிக திட்டம்தான் என்கின்றனர் சிலர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
View this post on Instagram
நயன்தாரா முன்னதாக நடத்திவரும் வணிகங்கள் குறித்து பார்க்கலாம் :
தயாரிப்பு நிறுவனம் :
நயன்தாரா நடிகை , விக்னேஷ் சிவன் இயக்குநர் இதை தாண்டி இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் கூழாங்கல் , காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட பல படங்களை தயாரித்து வருகின்றனர்
சாய் வாலே :
தென்னிந்தியாவில் பிரபலமான சாய் வாலே தேநீர் விற்பனை கடையில் நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து 5 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கின்றனர். அது லாபத்தில் சென்றுகொண்டிருக்கிறது.
லிப் பாம் கம்பெனி :
மருத்துவர் ரெனிட்டா ராஜன் மற்றும் நயன்தாரா இணைந்து தி லிப் பார்ம் கம்பெனி என்னும் புதிய காஸ்மெட்டிக் நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இது முழுக்க முழுக்க பெண்களுக்கான லிப் ஸ்டிக்கை மட்டுமே தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் . இதன் பிராண்ட் அம்பாசிட்டராக நயன்தாரா உள்ளார்.
ஃபிபோலா :
ஃபிபோலா ஆன்லைனில் இறைச்சி விற்பனை செய்வதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக நயன்தாரா உள்ளார். இந்த நிறுவனத்திற்கான புரமோஷன் மற்றும் விளம்பரங்களை நயன்தாரா செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.