Nayanthara Insta | விக்னேஷ் சிவன் ஃபோனை ரகசியமாக அன்லாக் செய்த நயன்தாரா: எதற்குத் தெரியுமா?
நயன்தாரா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை குறிப்பாக அவருக்கென அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கங்கள் கிடையாது.
![Nayanthara Insta | விக்னேஷ் சிவன் ஃபோனை ரகசியமாக அன்லாக் செய்த நயன்தாரா: எதற்குத் தெரியுமா? Nayanthara hacks boyfriend Vignesh Shivan's phone to click a mesmerising selfie on Mumbai vacay Nayanthara Insta | விக்னேஷ் சிவன் ஃபோனை ரகசியமாக அன்லாக் செய்த நயன்தாரா: எதற்குத் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/15/d950250c79324881730ef7d6e61f83d0_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோலிவுட் வட்டாரத்தில் அதிகம் கவனிக்கப்படுபவர்கள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஜோடிதான். நயன்தாரா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. லேடி சூப்பர்ஸ்டார் என்ற அடைமொழியைப் பெற்றவர். இருந்தாலும், நயன்தாரா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை குறிப்பாக அவருக்கென அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கங்கள் கிடையாது.
எனவே அவரது புகைப்படங்களையும் ,அவர் படம் குறித்த அப்டேட்டுகளையும் காதலனான விக்னேஷ் சிவன்தான் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஆக்டிவாக இருக்கும் அவர் அப்டேட்டுக்காக நயன் ரசிகர்களும் காத்திருப்பர்.
இந்நிலையில் நயன்தாரா தனது தனது காதலர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரு செல்ஃபியைப் பகிர்ந்து ரசிகர்களின் சூட்டைக் கிளப்பிவிட்டுள்ளார். அவரது விரல் நகங்களும், நகப்பூச்சும் நங்கை கொண்ட விரல்கள் அதிசயமே எனப் பாட வைக்கும் அளவுக்கு அழகாக உள்ளன.
அதுமட்டுமல்லாமல், அவர் காதலர் விக்னேஷ் சிவனுடன் எடுத்த இன்னொரு புகைப்படத்தைப் பகிர்ந்து, தசரா வாழ்த்து பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களை அவர் காதலர் விக்னேஷ் சிவனின் போனைப் பயன்படுத்தி எடுத்துள்ளார்.
அதனால், இப்போது அவர் தனது காதலருடன் மும்பையில் இருக்கிறார். ஆனால், இது விடுமுறையா அல்லது பணி நிமித்தமான ட்ரிப்பா என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
தற்போது நயன்தாரா லயன் என்ற படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை அட்லீ இயக்குகிறார்.
இதுதவிர, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கதவுக்குள்ள ரெண்டு காதல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஷாருக்கானுடனும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
அல்ஃபோன்ஸ் புத்ரன் இயக்கத்தில் பிருத்விராஜுடன் கோல்ட் எனும் படத்தில் நயன் நடிக்கிறார். அல்ஃபோன்ஸ் புத்ரன், நேரம், பிரேமம் திரைப்படங்களால் மலையாளம், தமிழ் என இரண்டு திரைத்துறையிலும் ரொம்பவே ஃபேமஸ்.
தனது நண்பர் நிவின் பாலி, சாய் பல்லவி கூட்டணியில் பிரேமம் படத்தை இயக்கினார் அல்ஃபோன்ஸ் புத்ரன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட். என்றாலும் கூட ஆறு வருடங்களாக அல்ஃபோன்ஸ் புத்ரன் எந்தவொரு திரைப்படத்தையும் இயக்கவில்லை. அல்ஃபோன்ஸ் புத்ரன் ஏன் படம் இயக்கவில்லை என கேள்விகள் எழுந்த நிலையில் அவர் ப்ருத்விராஜ், நயன்தாராவை வைத்து கோல்ட் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா, ப்ருத்விராஜுடன் 47 பேர் நடிக்கின்றனர். அண்மையில், நயன், விக்னேஷ் சிவன் ஜோடி ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் அந்தத் தகவலை இருவருமே மறுக்கவும் இல்லை, ஆமோதிக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)