Trending : நாயகனும் தளபதியும் கைகோர்த்தால்...வீடியோ பகிர்ந்த லைகா... ட்ரெண்ட் செய்யும் நெட்டிசன்கள்!
நாயகன் வேலு நாயக்கர், தளபதி சூர்யா இருவரது மாஸ் மொமண்ட்கள், எழுச்சி என காண்போரைக் கவரும் வகையில் எடிட் செய்யப்பட்ட இந்த வீடியோ மணிரத்னம் - ரஜினி - கமல் ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட நாயகன் - தளபதி பட மேஷ அப் வீடியோ இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது.
கடந்த செப்.6ஆம் தேதி நடைபெற்ற ’பொன்னியின் செல்வன்’ பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் கோலிவுட்டின் பெரும் நட்சத்திரங்களான ரஜினி, கமல் இருவரும் கலந்துகொண்டு விழாவை மேலும் சிறப்பாக்கினர்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்காக விருந்தாக அமைந்த இந்த நிகழ்ச்சியில், மணிரத்னம் இயக்கத்தில் கமல், ரஜினி இருவரும் நடித்த ‘நாயகன்’ மற்றும் ‘தளபதி’ படங்களில் காட்சிகள் எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று திரையிடப்பட்டது.
இயக்குநர் மணிரத்னத்தின் கரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய இரண்டு படங்கள் கமல்ஹாசனின் நாயகன் (1987) மற்றும் நடிகர் ரஜினிகாந்தின் தளபதி (1991).

அன்றைய காலக்கட்டத்தில் வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிபெற்ற இந்த இரு படங்களும் இன்று வரை தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்களாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மணிரத்னம் - ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இவர்கள் மூவரையும் பெருமைப்படுத்தும் வகையில், இவர்களது காம்போவை சிறப்பிக்கும் வகையிலும் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் திரையிடப்பட்ட இந்த வீடியோ அங்கிருந்த பார்வையாளர்களையும், தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
ரஜினி- கமல் இருவரும் ஏற்கெனவே தமிழ் சினிமாவில் நட்பின் இலக்கணமாக வலம் வரும் நிலையில் இந்த வீடியோ விழாவில் கலந்து கொண்ட இருவரது நட்பையும் பெருமைப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
View this post on Instagram
இந்த வீடியோவை முன்னதாக லைகா ப்ரொடக்ஷன் தங்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் முன்னதாகப் பகிர்ந்த நிலையில், இணையத்தில் ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நாயகன் வேலு நாயக்கர், தளபதி சூர்யா இருவரது மாஸ் மொமண்ட்கள், எழுச்சி என காண்போரைக் கவரும் வகையில் எடிட் செய்யப்பட்ட இந்த வீடியோ, இயக்குநர் மணிரத்னம் ரசிகர்களையும், ரஜினி - கமல் ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
உலகம் முழுவதுமுள்ள தமிழர்களின் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு இடையே பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.





















