Napoleon Home Tour: 12,000 சதுர அடி.. வாயை பிளக்க வைக்கும் வசதிகள்.. மகனுக்காக நெப்போலியன் கட்டிய அரண்மனை!
வீட்டிற்கு உள்ளேயே தியேட்டர் , நீச்சல் குளம் மற்றும் கூடைப்பந்து விளையாடும் இடத்துடன் அமைந்துள்ளது அது மட்டுமல்லாமல் தன் மகனுக்கு ஏற்றவாறு வீடு முழுவதும் லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.
1991ஆம் ஆண்டு பாரதிராஜாவின் ’புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நெப்போலியன், 1993-இல் சூப்பர் ஹிட் படமான ’சீவலப்பேரி பாண்டி’யில் ஹீரோவாகி, தொடர்ந்து இன்று வரை பல படங்களில் பல வித கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் கோலிவுட் தாண்டி 'டெவில்ஸ் நைட்’, ’க்ரிஸ்மஸ் கூப்பன்’ போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்து நெப்போலியன் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
நன்றி: இர்ஃபான்
தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியன், அங்கு தான் வசிக்கும் வீட்டை பிரபல யூடியூப்பரான இர்ஃபானுக்கு சுற்றிக்காட்டியுள்ளார். அது தொடர்பான வீடியோவை இர்ஃபான் தன்னுடைய யூடியூப் சேனலில் ஹோம் டூராக பதிவேற்றி இருக்கிறார். தற்போது அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் பல சுவாரசியமான தகவல்களை நெப்போலியன் பகிர்ந்து உள்ளார் அதை இங்கு பார்ப்போம்.
நெப்போலியன் அமெரிக்காவிற்கு சென்றதற்கு காரணம் அவரது மகன்தான்; மாற்றுத்திறனாளியாக இருக்கும் தன் மகனுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார் நெப்போலியன்.அமெரிக்காவிற்கு சென்று 12 வருடங்கள் ஆகிவிட்டாலும், அவர் தற்போது இருக்கும் அந்த வீடு வாங்கி 6 வருடங்கள் ஆகின்றன.
நெப்போலியன் அவர்களின் வீடு 12000 சதுர அடியை கொண்டது. மிகவும் பிரமாண்டமாக மூன்று அடுக்குமாடி கட்டிடங்களாக அந்த வீடு அமைந்துள்ளது. வீட்டிற்கு உள்ளேயே தியேட்டர் , நீச்சல் குளம் மற்றும் கூடைப்பந்து விளையாடும் இடம் என பல வசதிகள் உள்ளன. அது மட்டுமல்லாமல் தன் மகனுக்கு ஏற்றவாறு வீடு முழுவதும் லிப்ட் வசதிகளை செய்திருக்கிறார்.
அந்த வீடியோவில் நெப்போலியன் பேசும் போது, “வீடு முழுவதுமே என்னுடைய முதல் மகனான தனுஷூக்காக பார்த்து பார்த்து மாற்றி அமைத்து வைத்துள்ளேன். எனக்கு எல்லாமே என்னுடைய இரண்டு மகன்கள் தான். அவர்கள் இரண்டு பேரும் ஆசையும் பூர்த்தி செய்வதற்காக தான் இந்த வீட்டை நான் இப்படி பராமரித்து வருகிறேன்.
தன்னுடைய மனைவியைப் பற்றி நெப்போலியன் பேசும் பொழுது, தமிழ்நாட்டில் இருக்கும் பொழுது இவர் அசைவம் செய்ய மாட்டார், சாப்பிடவும் மாட்டார். ஆனால் அமெரிக்கா வந்த பிறகு எனக்காகவும் குழந்தைகளுக்காகவும் அசைவம் சமைப்பதற்கு கற்றுக்கொண்டு, மிகவும் அருமையாக சமைத்து வருகிறார். இந்த ஏரியாவில் இவரை போல அசைவம் ருசியாக யாரும் சமைக்க முடியாது.
நெப்போலியன் உடைய இரண்டாவது மகன் குணால் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். தற்போது நான்காவது வருஷத்தை படித்து வருவதால் அவருடைய டெஸ்லாக் காரை எடுத்துச் சென்று விட்டார். அது அவருக்கு அங்கு மிகவும் உபயோகமாக உள்ளது.
வீட்டில் மொத்தம் நான்கு வண்டிகள் உள்ளன. ஒன்று என்னுடைய பயன்பாட்டிற்கு, மற்றொன்று நாங்கள் குடும்பத்தோடு வெளியே செல்வதற்கு. குடும்பத்தோடு வெளியே செல்ல வைத்திருக்கும் வண்டி உள்ளேயே லிப்ட் வசதி அனைத்தும் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க கலாச்சாரப்படி அனைவரும் சாப்பாட்டிற்கு பிறகு மது குடிப்பது ஒரு பழக்கமாக இருந்து வருகிறது. அதனால் அதற்கு ஒரு தனி அறையை வைத்துள்ளேன். எனக்கு அந்த பழக்கம் இல்லை என்றாலும் வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுப்பதற்காக இது அனைத்தையும் வாங்கி வைத்துள்ளேன்.
அமெரிக்காவை பொறுத்தவரை அவரவர் வேலைகளை அவர் அவர் தான் செய்து கொள்ள வேண்டும் ,இந்த பழக்கம் வந்துவிட்டால் போதும் வீடாக இருந்தாலும் சரி நாடாக இருந்தாலும் சரி சுத்தமாக இருக்கும்.
நன்றி இர்ஃபான்