Balakrishna Watched Vaathi : தனுஷின் ‘SIR’ திரைப்படத்தை பார்த்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்; என்ன சொன்னார் தெரியுமா?
Balakrishna Watched Vaathi: தனுஷின் SIR திரைப்படத்தை நந்தமூரி பாலகிருஷ்ணா பாராட்டியுள்ளார்.
பிரபல நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் வாத்தி. ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், தெலுங்கு சினிமாவின் ஸ்டார், தயாரிப்பாளர், ஆந்திர சட்டமன்ற உறுப்பினர் நந்தமூரி பாலகிருஷ்ணா தெலுங்கில் வெளியான ’SIR ’ (வாத்தி) படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.
சர் படம் சிறப்பாக இருந்ததாக படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது ’வாத்தி ’. தெலுங்கில் ‘SIR ’ என்ற தலைப்பில் வெளியானது. தனுஷின் மாறுபட்ட நடிப்பி, ஆசிர்யர் ரோல் மக்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. தனுஷ் ரசிகர்கள் மகிழ்ந்தனர். கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்றாலும், தனுஷ் நடிப்பு பேசப்பட்டது.
வாத்தி - தனுஷ்
பிப்ரவரி, 17ஆம் தேதி உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் ரிலீசான இப்படம் தனியார்மயமாக்கப்பட்ட, வணிகமயமாக்கப்பட்ட கல்வி, கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றை பேசும் படமாக அமைந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தது. கோலிவுட் சினிமாவில் தனுஷ் முதன்முறையாக இப்படத்தில் பள்ளி ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்தது வரவேற்பை பெற்றது.
மேலும், முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வாத்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிதும் அதிகரித்தது. மேலும் தெலுங்கிலும்ன் சார் எனும் பெயரில் வாத்தி படம் வெளியான நிலையில், ஹைதராபாத்தில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவும் பிரம்மாண்டமான முறையில் நிகழ்த்தப்பட்டு முன்னதாக லைக்ஸ் அள்ளியது.
வசூல் நிலவரம்:
சுமார் 30 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட வாத்தி படம், வெளியான இரண்டு நாள்களில் 24 முதல் 25 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்நிலையில் தற்போது படம் வெளியாகி ஐந்து நாள்களில் தமிழில் 33 கோடிகள், தெலுங்கில் 22 கோடிகள், வெளிநாடுகளில் 5 கோடிகள் என மொத்தம் 60 கோடி வசூலை எட்டியுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
இரண்டு படங்களுக்கு தேசிய விருது :
நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 2011ம் ஆண்டு ஆடுகளம் படத்திற்காகவும் 2020ம் ஆண்டு அசுரன் திரைப்படத்திற்காகவும் பெற்றுள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் இசையமைப்பாளராக பணியாற்றியது ஜி.வி. பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
வாத்தி ஆடியோ லான்ச் விழாவில் தனுஷ் ரசிகர்கள் திரளாக கூடியிருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் வாத்தி திரைப்படம் பிப்ரவரி 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வாத்தி கதை
1990 தொடக்க காலக்கட்டத்தில் இந்தியாவில் தனியார் மயமாக்கல் கொள்கை அமலுக்கு வருகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற கல்வியின் வியாபார வளர்ச்சியின் நோக்கத்தை தெரிந்து கொண்ட தனியார் பள்ளிகள், நுழைவுத்தேர்வுக்கு பயிற்சி மையங்களை தொடங்கி நன்கு தேர்ந்த பள்ளி ஆசிரியர்களை விலைக்கு வாங்கி அரசு பள்ளிகளை மூடுகின்றனர். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்கக்கோரி மக்கள் போராட்டம் வெடிக்க அரசு கட்டண ஒழுங்குமுறை விதியை கொண்டு வந்து தனியார் பள்ளிகளுக்கு செக் வைக்க நினைக்கிறது.
இதனை தெரிந்து கொண்ட அந்த கூட்டமைப்பின் தலைவராக வரும் சமுத்திரக்கனி அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அனைவருக்கும் கல்வி கொடுப்பதாக அறிவிக்கிறார். மூடப்பட்ட அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த இரண்டாம், மூன்றாம் தர ஆசிரியர்களை அனுப்பி கல்வியை கெடுக்க நினைக்கிறார். அதில் கல்வி அனைவருக்கும் போய் சேர வேண்டும் என நல்ல எண்ணம் கொண்ட வாத்தியாராக தனுஷ் இருக்கிறார். தனுஷ் சென்ற ஊரில் உள்ள மாணவர்களுக்கு கல்வி கிடைத்ததா? அல்லது சமுத்திரகனியின் எண்ணம் நிறைவேறியதா? என்பதை பொறுமையை சோதிக்கும் வகையில் சொல்கிறது “வாத்தி” திரைப்படம்.