watch video | 'நெகிழ்ச்சியாக பேசிய Professor.. இந்தியா வரும் ஹெலன்ஸ்கி.. 'money heist ' டீம் வெளியிட்ட வீடியோ!
பலரின் மனம் கவர்ந்த ஹெலன்ஸ்கி , கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்ததும் நான் இந்தியா வருகிறேன். குறிப்பாக கோவாவில் சில காலம் செலவிட வேண்டும் “ என தெரிவித்திருப்பது இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது,
உலகம் முழுக்க உள்ள திரைப்பட ரசிகர்களை வெப் சீரிஸ் பக்கம் திரும்ப வைத்ததில் ‘மணி ஹைஸ்ட்’ வெப் தொடருக்கும் பங்குண்டு என்றால் மிகையில்லை. அந்த அளவிற்கு தொடரின் ஐந்து பாகங்களையும் ரசிகர்கள் கொண்டாடினர். money heist இல் பயணம் செய்யும் Professor முதல் டோக்கியோ வரையிலான அனைத்து கதாபாத்திரங்களோடும் ஒன்றிப்போனார்கள் ரசிகர்கள். குறிப்பாக இந்தியாவில் இந்த தொடருக்கான மவுசு சற்று அதிகம்தான். அதனை நினைவில் கொண்டுதால் மணி ஹைஸ்டின் முக்கிய கதாபாத்திரங்கள் இந்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளனர்.
View this post on Instagram
மணி ஹைஸ்ட்டில் எல்லோருக்கும் பிடித்தமான கதாபாத்திரம் என்றால் Professor ஆக நடித்த Alvaro Morte . தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவில் ,அவர் “நமஸ்தே இந்தியா “ என தொடங்குகிறார்.இந்தியாவில் மணி ஹைஸ்ட் வெப் தொடரை மாபெரும் ஹிட் ஆக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. “ நாங்கள் இந்த சீரிஸ் மற்றும் கதாபாத்திரங்களுக்கு நீண்ட காலமாக இவ்வளவு அன்பு கிடைக்கும் என நினைத்து பார்க்கவே இல்லை. ரொம்ப நன்றி “ என்கிறார் Professor . அதன் பிறகு பேசும் அன்வரின் காதலியாக நடித்த மோனிகா “ உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி “ என தெரிவித்ததும் அடுத்தடுத்து காவல் துறை அதிகாரியாக நடித்த இரண்டு பெண்களும் தங்கள் நன்றியினை தெரிவித்துள்ளனர். அதன் பிறகு பேசிய பலரின் ஃபேவரெட் பெர்லின் “ உங்கள் எல்லோரின் முயற்சிக்கும் நன்றி ,எல்லோருக்கும் என்னுடைய hugs ” என கூற , காவல்துறை அதிகாரி “சுக்ரியா” என வீடியோவை முடித்து வைக்கிறார்.
View this post on Instagram
அடுத்த வீடியோ ஒன்றில் மணி ஹைஸ்ட் நட்சத்திரங்கள் தங்களுக்கும் இந்தியாவிற்குமான தொடர்பு குறித்தும் , அவர்கள் தங்களுக்கு அளித்த அன்பு குறித்தும் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளனர்.குறிப்பாக பலரின் மனம் கவர்ந்த ஹெலன்ஸ்கி , கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்ததும் நான் இந்தியா வருகிறேன். குறிப்பாக கோவாவில் சில காலம் செலவிட வேண்டும் “ என தெரிவித்திருப்பது இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது,