Nagendran’s Honeymoons in OTT : ஐந்து மனைவிகளுடன் அசத்தும் 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்'... இனி 7 மொழிகளில் ஓடிடியில் ரசிக்கலாம்...
Nagendran’s Honeymoons in OTT : மலையாள சீரிஸான 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 7 மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.
2024ம் ஆண்டு மலையாள சினிமாவுக்கு ஒரு அசத்தலான ஆடக அமைந்துள்ளது. மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ், ஆவேஷம், பிரேமலு, பிரம்மயுகம் உள்ளிட்ட ஏராளமான படங்கள் மற்ற மொழிகளிலும் வெளியாகி அமோக வரவேற்பையும் வசூல் வேட்டையும் செய்தது. ஓடிடி தளங்களிலும் வெளியாகி மிகவும் வெற்றிகரமாக ஒட்டிக்கொண்ட இருக்கின்றன.
குறைந்த அளவிலான பட்ஜெட் என்றாலும் நல்ல திரைக்கதை கொண்ட படங்கள் என்பதால் மக்களின் நன்மதிப்பை பெற்று கொண்டாடப்படுகின்றன. இந்த வெற்றி படங்களின் வரிசையில் தற்போது அடுத்ததாக இணைந்துள்ளது புதிய சீரிஸான 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்'. இது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நான்காவது ஒரிஜினல் மலையாள சீரிஸாகும்.
கேரளா கிரைம் பைல்ஸ், மாஸ்டர் பீஸ், பேரிலோர் பிரீமியர் லீக் ஆகிய வெப் தொடர்களை இயக்கிய ரெஞ்சி பாணிக்கர், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' சீரிஸை எழுதி, இயக்கியதுடன் MGC(P) Ltd உடன் இணைந்து நிதின் ரஞ்சி பணிக்கர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்தும் உள்ளார். நிகில் S பிரவீனின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள ரஞ்சின் ராஜின் இப்படத்திற்கு இசையமைதுள்ளார். இது கடந்த ஜூலை 19ம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு வருகிறது.
இதில் சூரஜ் வெஞ்சாரமூட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கிரேஸ் ஆண்டனி, ஷேவ்தா மேனன், கனி குஸ்ருதி, ஆல்பி பஞ்சிகரன், நிரஞ்சனா அனூப், பிரசாந்த் அலெக்சாண்டர், அம்மு அபிராமி, ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன் & ரமேஷ் பிஷாரடி உள்ளிட்டோரின் நடித்துள்ளனர்.
ஐந்து மனைவிகளுடன் வாழ்வை எதிர்கொள்ளும், 'நாகேந்திரனின் ஹனிமூன்ஸ்' சீரிஸ் பழங்கால கேரள வாழ்க்கை முறையின் பின்னணியில், கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும், குழப்பமான பலதரப்பட்ட திருமண பாணிகளால் நிகழும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. சரவெடி காமெடி, சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய முழுமையான பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவை, கலந்த அசத்தலான அனுபவத்தை தரும் இந்த சீரிஸ் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி என ஏழு மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. இந்தியா எங்கும் உள்ள ரசிகர்கள் இந்த காமெடி சீரிஸை அவரவர்களின் தாய்மொழியில் ரசிக்கலாம்.