மேலும் அறிய

Naai Sekar Returns Twitter Review : குழந்தைகளுக்கு கண்டிப்பா இந்த படம் பிடிக்கும்.. ஆனா.. கலவையான விமர்சனங்களை பெறும் நாய் சேகர்

Naai Sekar Returns twitter review : இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை முன் எடுத்து வைக்கின்றனர். 

வைகைப் புயல் என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுபவர் வடிவேலு. காமெடியில் கலக்கி, ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருடத்திற்கு பல படங்களில் நடித்து வந்தார் இவர். பின், 2012-ஆம் ஆண்டிலிருந்து  இவர் நடித்த , எலி, கத்தி சண்டை, சிவ லிங்கா, மெர்சல் ஆகிய படங்களில் பழைய வடிவேலுவின் காமெடி எல்லாம் வொர்க்-அவுட் ஆகாமல் மொக்கை வாங்கியது.

அந்த வரிசையில் இந்தாண்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தின் ட்ரைலரில், இந்தியாவின் முதல் நாய் கடத்தும் நபர்' என ட்ரெய்லரில் அறிமுகமாகியிருக்கிறார் வைகைப்புயல். பல ஆண்டுகளாக பழைய வடிவேலுவை பார்க்க வேண்டும் என தவமாய் தவமிருந்த ரசிகர்களுக்கு காமெடி விருந்தாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கபட்டிருந்த நிலையில், இந்த படம் இன்று வெளியாகியுள்ளது.

நாய் சேகர் ரிட்டர்னஸ் படத்தின் ட்விட்டர் விமர்சனம் :

இந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையில் வெளியான இப்படத்தை, பார்த்த ரசிகர்கள், கலவையான விமர்சனத்தை சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அமெரிக்காவில் திரையிடப்பட்ட ப்ரீமியர் ஷோவில், இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ரசிகர்கள், “பழைய வடிவேலு மீண்டும் வந்துவிட்டார்” என்ற பாசிட்டிவான விமர்சனங்களை முன் எடுத்து வைக்கின்றனர். 

விமர்சகர்கள் சிலர், இப்படத்தில் வடிவேலுதான் முக்கிய தூணாக அமைந்து இருக்கிறார். பழைய வடிவேலுவை மீண்டும் கொண்டு வர இயக்குநர் முயற்சி செய்துள்ளார் ஆனால், அது வொர்க்-அவுட்டாகவில்லை என்று பதிவிட்டுள்ளனர்.

மக்கள் தொடர்பாளர்களிடம் இருந்து வரும் விமர்சனங்களை விட, பொது மக்கள் கூறும் கருத்துக்களே நியாமாகவும் உண்மையாகவும் இருக்கும். அப்படி பார்த்தால், நாய் சேகர் படம், காமெடியாக இருப்பதாகவும் குடும்பத்துடன் பார்க்கலாம் என்றும் குழந்தைகளுக்கும் இப்படம் பிடிக்கும் என்றும் கூறிவருகின்றனர். அத்துடன் சந்தோஷ் நாராயணின் இசை பிரமாதமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

படத்தில் நடித்த நட்சத்திரங்கள்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரமான நாய் சேகர் எனும் லீட் ரோலில் நடித்துள்ளார். இவரின் மகளாக விஜய் டிவி பிரபலம் மற்றும் பாடகியான சிவாங்கி கிருஷ்ணகுமார் நடித்துள்ளார். மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
கமல் பட நடிகையை கடிக்கப் பாய்ந்த நாய்... பதறிப்போன ரசிகர்கள்! வைரலாகும் வீடியோ
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
இது இல்லையென்றால் ரஜினி படமாக இருந்தாலும் தயாரிக்க மாட்டோம்..ஓப்பனாக பேசிய அர்ச்சனா கல்பாத்தி
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
மிஸ் ஆகும் பழைய மேஜிக்...ஆல்பம் ஹிட் கொடுத்த ஜிவி பிரகாஷ் என்ன ஆனார்?
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து
'செய்! செய்யாதே!' இசை, டிரெய்லர் வெளியீடு... சமூக விழிப்புணர்வு படத்திற்கு பிரபலங்கள் வாழ்த்து

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget