மேலும் அறிய

Myositis Explained:சமந்தா பாதிக்கப்பட்டுள்ள நோய் குறித்து தெரியுமா உங்களுக்கு?

Myositis Explained in Tamil:பிரபல நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயைப் பற்றி தெரியுமா உங்களுக்கு?

சமந்தாவிற்கு மையோஸ்டிஸ் பாதிப்பு:

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய படங்களில் பிசியான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இவர் நடித்ததைத் தொடர்ந்து, யசோதா என்ற தொங்கு படத்திலும் ஸ்டார்ங்கான ரோலில் நடித்திருந்தார். இப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 27-ஆம் தேதி வெளியானது. இதையடுத்து,  நடிகை சமந்தா  தான் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவதாக கூறி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். 

அந்த பதிவில், யசோதா படத்தின் ட்ரெய்லருக்கு நீங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், சில மாதங்களுக்கு முன்பு எனக்கு Myositis எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாக தெரிவித்திருந்தார்.  இதையடுத்து இந்த மையோஸ்டிஸ் நோய் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

மையோஸ்டிஸ் எனப்படும் அரிய நோய்:

மையோஸ்டிஸ் எனப்படுவது, தசை வீக்கத்தை ஏற்படுத்தும் அரிய நோயாகும். இந்த நோய் ஏற்பட்டால், தசை பகுதிகள் அனைத்தும் பலவீனமாகவும், சோர்வாகவும், வலியுடனும் இருக்கும். இந்நோய்க்கு வயது வரம்பு கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்நோய் வரலாம். 

இந்நோய் தாக்கினால், நம் உடலில் அதிகம் தசைகள் உள்ள பகுதிகள் எனக் கருதப்படும் தோள்பட்டை, இடுப்பு மற்றும் தொடை ஆகிய பகுதிகளில் தசைப் பிடிப்பு ஏற்படும். இதனால், தோல், நுரையீரல் அல்லது இதயம் போன்ற உடலின் மற்ற பாகங்களும் பாதிக்கப்படலாம்.

மையோஸ்டிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நேரங்களில் மூச்சு விடுவதற்கும் எதையாவது விழுங்குவதற்கும் பயன்படக்கூடிய தசைகள் பாதிக்கப்படும். 

நோயின் வகைகள் என்ன?

மையோஸ்டிஸ் நோயில் பல வகைகள் உள்ளன. ஆனால், மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக கருதப்படுவது பாலிமயோசிடிஸ் (polymyositis) மற்றும் டெர்மடோமயோசிடிஸ் (dermatomyositis). 

Polymyositis எனும் வார்த்தையில், Poly எனப்படுவது நிறைய எனும் வார்த்தையை குறிக்கும். இதற்கு அர்த்தம், பாலிமயோசிடிஸ் வகை மையோஸ்டிஸ் தொற்று வருவதனால், உடலின் பெரும்பாலான பாகங்கள் பாதிப்படையும். 

Dermatomyositis வகை நோய் தாக்கத்தினால் தசைகளை விட உடலின் மேல் உள்ள தோள்கள் ரேஷஸ் போன்ற பாதிப்புகள் ஏற்படும். 

நோய்க்கான காரணம் என்ன?

Myositis Explained:சமந்தா பாதிக்கப்பட்டுள்ள நோய் குறித்து தெரியுமா உங்களுக்கு?

  • அதீத உடற்பயிற்ச்சி இந்நோய்க்கான காரணமாக இருக்கலாம்.
  • பல்வேறு மருந்துகளை பயன்படுத்துவதினால் இந்நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 
  • உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால், இந்நோய் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. 

நோய்க்கான அறிகுறிகள்:

Myositis Explained:சமந்தா பாதிக்கப்பட்டுள்ள நோய் குறித்து தெரியுமா உங்களுக்கு?

  • வாழ்வின் அன்றாட பணிகளாக கருதப்படும் தலை வாருதல், படி ஏறுதல் போன்றவை கடினமாகும்.
  • தசை பகுதிகளில் வலி ஏற்படும்.
  • கண் இமைகள், முகம் மற்றும் கழுத்து மற்றும் கைகள் மற்றும் விரல்களின் பின்புறத்தில் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் சொறி ஏற்படும். 
  • கண்களைச் சுற்றியுள்ள நிறம் மாறுபட்டு வீக்கமடையும். 
  • தசைகளில், தொட்டோலே வலிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
  • தசைகள் சில நேரங்களில் வீக்கத்துடன் காணப்படும்.
  • இந்நோயினால் பாதிப்படைந்தவர்கள் உடல் இடை குறைந்து சோர்வாக காணப்படுவார்கள்.
  • இரவு நேரங்களில் வியர்க்கும்.

குணப்படுத்துவது எப்படி?

  • பிசியோதெரப்பி எனப்படும் உடற்பயிற்சி சிகிச்சையின் மூலம் இந்நோயினை குணப்படுத்தலாம்.
  • மையோஸ்டிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி உடற்பயிற்சி செய்வதனால், இதிலிருந்து மீளலாம்.
  • தொண்டையை சுற்றி இருக்கும் தசைகளில் மையோஸ்டிஸ் நோய் தாக்கினால், சிலருக்கு பேசுவதில் சிரமம் ஏற்படும். இதனை, ஸ்பீச் தெரபி மூலம் குணப்படுத்த முடியும்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
Embed widget