மேலும் அறிய

Dulquer salmaan: ‛இனி காதல் கதையில் நடிக்க மாட்டேன்...’ -துல்கர் சல்மான் அதிரடி பேட்டி!

எப்போதும் என்னுடைய வாழ்வில் என் தந்தை தான் எனக்கு ஹீரோ. அவரை பெருமைப்படுத்துவது எனது கடமை என்கிறார் நடிகர் துல்கர் சல்மான்

இயக்குநர் ஹனு ராகவ்புடி யக்கத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா உள்ளிட்ட பலரது நடிப்பில உருவாகியிருக்கும் திரைப்படம்  ‛சீதா ராமம்’.தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படம் வருகிற நாளை (ஆக 5) - இல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப்படம் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். 

View this post on Instagram
 
A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

உங்கள் முந்தைய படங்களை ஒப்பிடும்போது 'சீதா ராமம்' படத்தின் எந்த வகையில் வித்தியாசப்படும்..?

'சீதா ராமம்' ஒரு அசலான கதை. உண்மை கதையில் இது போன்ற கிளாசிக் அமைவது அரிது. இப்படி ஒரு கதை உலகில் எங்கும் இதற்கு முன் வரவில்லை. திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அது நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும். தற்போது வெளியாகியிருக்கும் முன்னோட்டத்தில் நீங்கள் பார்த்தது குறைவு தான். பெரிய திரையில் அதை நீங்கள் ரசித்து அனுபவிக்க வேண்டும்.

இனி காதல் கதையில் நடிக்க மாட்டேன் என்று சொல்கிறீர்களே ஏன்..?

நாளுக்கு நாள் எனக்கும் வயதாகிறது. வித்தியாசமான முதிர்ந்த வேடங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். புதிய கதாபாத்திரங்களிலும், நிஜமான வேடங்களிலும் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். காதல் கதைகளுக்கு சற்று ஓய்வு கொடுக்கலாம் என நினைக்கிறேன்.

'சீதா ராமம்' படத்தில் உங்களுக்கு பிடித்த பாடல் எது?

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் சூப்பரான ஆல்பத்தை அளித்திருக்கிறார். படத்தின் இசை நன்றாக இருக்கும் என்று கதையை கேட்கும்போதே புரிந்து கொண்டேன். காஷ்மீரில் படப்பிடிப்பில் 'காணுன்னா கல்யாணம்..' என்ற பாடல் படமாக்கப்படும்போது இந்தப் பாடல் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தும் என்பது புரிந்தது. இந்த ஆல்பத்தில் 'காணுன்னா கல்யாணம்..' என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தது.

சீதையை பற்றி..?

ஒரு உன்னதமான நாவலை படிக்கும் போது சில கதாபாத்திரங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நாம் கற்பனை செய்து கொள்கிறோம். 'சீதா ராமம்' படத்தின் கதையைக் கேட்டதும், சீதையின் வேடத்தை கற்பனை செய்து பார்த்தேன்.

மிருணாள் தாகூர் இந்த பாத்திரத்தில் வந்தபோது மிகச்சிறந்த தேர்வாக தோன்றியது. படப்பிடிப்பு தளத்தில் மிருணாளை பார்த்தபோது அவரைத் தவிர வேறு யாராலும் சீதையாக நடித்திருக்க இயலாது என்பதை உணர்ந்தேன். அவருடைய கதாபாத்திரம் அற்புதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படப்பிடிப்பு தளத்திலும், மிருணாள் தாகூர் மகிழ்ச்சியான நபராகவே வலம் வந்தார்.

படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ராஷ்மிகா மந்தானா குறித்து..?

இந்தப் படத்தில் புதிய ராஷ்மிகாவை பார்ப்பீர்கள். அவர் இதற்கு முன் இப்படியான ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. 'சீதா ராமம்' படத்தின் கதையை நகர்த்தி செல்லும் அற்புதமான ஆற்றல் ராஷ்மிகா கதாபாத்திரத்திடம் இருக்கிறது. 

'சீதா ராமம்' படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் குறித்து..?

'சீதா ராமம்' படத்தில் தெலுங்கு, தமிழ், பெங்காலி என பல்வேறு மொழிகளில் திறமை வாய்ந்த நடிகர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தருணங்கள் அனைத்தும் அற்புதமான அனுபவத்தை வழங்கியது. கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி அடைந்தேன்.

நடிகராக இல்லாவிட்டால் என்னவாகியிருப்பீர்கள்?

பல தருணங்களில் எனக்கும் இப்படி ஒரு குழப்பமான எண்ணம் ஏற்படும். நான் முதுநிலை வணிக நிர்வாக பட்டதாரி என்பதால், ஒருவேளை முதலீட்டாளராக இருந்திருக்கலாம். எப்போதும் என்னுடைய வாழ்வில் என் தந்தை தான் எனக்கு ஹீரோ.

அவரை பெருமைப்படுத்துவது எனது கடமை. நாங்கள் வீட்டில் திரைப்படம் மற்றும் கதைகளை பற்றி விரிவாக பேசுகிறோம். என் கதைகளை ஒற்றை வரியில் சொல்கிறேன். நான் என் தந்தையின் தீவிர ரசிகன்.

திரைப்படங்களை இயக்கும் திட்டமிருக்கிறதா..?

தற்போது நேரமில்லை. ஆனால் எதிர்காலத்தில் படங்களை இயக்கும் எண்ணமிருக்கிறது. எனது இயக்கத்தில் ஒரு படம் தயாராகி வந்தால், அது பார்வையாளர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Fengal Cyclone: நாளை 16 மாவட்டங்களில் கனமழை.! அடுத்த 5 நாட்களுக்கும் கனமழை இருக்கு; லிஸ்ட் இதோ.!
Salem Power Shutdown: சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
சேலத்தில் நாளை (28.11.2024) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது மக்களே
Sabarimala: ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் -  புது அறிவிப்பு இதோ
ஐயப்ப பக்தர்களே பம்பை நதிக்கரையிலிருந்தும் இருமுடி கட்டி செல்லலாம் - புது அறிவிப்பு இதோ
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Suriya 45 : தோல்வியில் இருந்து மீளும் சூர்யா...கோயம்புத்தூரில் பூஜையுடன் தொடங்கியது சூர்யா 45 படப்பிடிப்பு
Embed widget