மேலும் அறிய

My Dear Marthandan: 32 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பிரதாப் போத்தன் செய்த மேஜிக் ‛மைடியர் மார்த்தாண்டன்’

My Dear Marthandan: 32 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் வெளியான மைடியர் மார்த்தாண்டன், அப்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம். 

மறைந்த இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் பிரதாப் போத்தனின் மிக முக்கியமான படைப்பு மைடியர் மார்த்தாண்டன். தமிழ் சினிமா எத்தனையோ உலகத்திற்குள் கதையை சொல்லியிருக்கிறது. தனக்கென ஒரு உலகத்தை உருவாக்கி, அதனுள் கதை சொல்பவர் பிரதாப் போத்தன்.

அப்படி தான், மைடியர் மார்த்தாண்டன் படத்தை உருவாக்கியிருப்பார். மன்னர் ஆட்சியே இல்லாத இந்தியாவில், ஒரு மன்னர் குடும்பம் இருப்பதாக கூறியிருப்பார். அந்த மன்னர் குடும்பத்தின் இளவரசரான பிரபுக்கு, அந்த சொகுசு சூழல் பிடிக்காது. ஆனாலும் தங்கள் மகன், அடுத்த நாட்டை ஆள தயாராக வேண்டும் என்கிற ஆசை அரசனான எஸ்.எஸ்.சந்திரனுக்கும், ராணி கோவை சரளாவுக்கும். 

View this post on Instagram
 
A post shared by unknown user (@unknown_user_account_in_no_use)

அவர்களது பாரம்பரிய முறைகளை இளவரசருக்கு போதிப்பார்கள். அதிலிருந்து விடுபட, அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்யும் இளவரசரை தடுக்க, ராஜா, ராணி மேற்கொள்ளும் முயற்ச்சிகள் எல்லாம் தோல்வியடைகிறது. இறுதியில் இளவரசரின் முடிவுக்கு உடன்படும் அவர்கள், அதற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயித்து, அவருக்கு உதவியாளர் ஒருவரையும், ரயில் நிறைய பொன் பொருளை அனுப்பி வைக்கிறார்கள்.

வெளிஉலகத்திற்கு வரும் இளவரசன், அங்கு சந்திக்கும் சூழல்கள், ஏமாற்றம், காதல், பிரிவு இது தான் மைடியர் மார்த்தாண்டன். வித்தியாசமான கதை களத்தில், அதற்கு ஏற்ப ஒளிப்பதிவு, இசை என எல்லாமே நேர்த்தியாக கொடுக்கப்பட்ட ஒரு மெகா ஹிட் திரைப்படம். பிரபு-குஷ்பூ காம்போவில் இதுவும் ஹிட் படம். கவுண்டமணியின் கலகலக்கல் காமெடி, இன்றும் பேசப்படுகிறது. 

View this post on Instagram
 
A post shared by Deeya Sashi Rekha (@deeyasashirekha)

இசைஞானி இளையராஜாவின் மேஜிக் இசை, படத்திற்கு ஏற்றவாறு புதிய பரிமாணத்தை தந்தது. அசோக்குமாரின் ஒளிப்பதிவு அரசாட்சியையும், மக்களாட்சியையும் தனித்தனியாக காட்டும். பொதுவாகவே காட்சிகளில் பிரதாப் மற்றவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபடுவார். இந்த படத்தில் அது கூடுதலாகவே இருக்கும். ஆர்.பி.விஸ்வம் எழுதி கதைக்கு பிரதாப் போத்தனின் இயக்கம் உயிர் கொடுத்தது என்பார்கள். 

அந்த வகையில் 32 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் வெளியான மைடியர் மார்த்தாண்டன், அப்போது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட திரைப்படம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Anita Goyal: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை செதுக்கிய நரேஷ் கோயலின் மனைவி மரணம்!
Anita Goyal: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை செதுக்கிய நரேஷ் கோயலின் மனைவி மரணம்!
செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!
செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!
ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”
ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Anita Goyal: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை செதுக்கிய நரேஷ் கோயலின் மனைவி மரணம்!
Anita Goyal: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை செதுக்கிய நரேஷ் கோயலின் மனைவி மரணம்!
செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!
செந்தில் பாலாஜியை மேற்கோள் காட்டிய வழக்கறிஞர்! சவுக்கின் போலீஸ் கஸ்டடிக்கு ஓகே சொன்ன நீதிமன்றம்!
ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”
ICC T20WC: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! ஸ்காட்லாந்துக்கு ஸ்பான்சர் செய்யும் கர்நாடக அரசின் பால் நிறுவனம் “நந்தினி”
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்
Breaking News LIVE: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஒருநாள் போலீஸ் காவல்
Embed widget