Coolie Movie: ரஜினிக்கு செக் வைத்த இளையராஜா.. கூலி படம் தொடங்குவதற்கு முன்பே வந்த சிக்கல்!
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் “கூலி” என்ற படத்தில் நடிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ரஜினி நடிக்கவுள்ள கூலி படத்தின் டீசரில் தன் இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் “கூலி” என்ற படத்தில் நடிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் டைட்டில் வீடியோ கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியானது. அந்த வீடியோ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்தில் ரஜினிகாந்த் நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பது போல தோன்றியுள்ளது. இந்த படத்தில் சத்யராஜ், ஷோபனா, ஸ்ருதிஹாசன் என பலரும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. எந்திரன், பேட்ட, அண்ணாத்த, ஜெயிலர் படங்களை தொடர்ந்து 5வது முறையாக கூலி படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் டைட்டில் டீசரில் தங்கமகன் படத்தில் இடம்பெற்ற வா வா பக்கம் வா பாடலின் இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், இசையை பயன்படுத்துவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் அல்லது டீசரில் இருந்து இசையை நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யாத பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்க எடுக்க தங்களுக்கு அனைத்து உரிமைகளும் இருப்பதாக அந்த நோட்டீஸில் இளையராஜா தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.