Music director thaman interview: “அனி இது என்னோட டைம்; இதை செய்யாம விடமாட்டேன்” - தளபதி 66 பற்றி மனம் திறந்த தமன்..!
விஜயின் 66 ஆவது படத்திற்கு இசையமைக்கும் தமன் அந்தப்படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
விஜயின் 66 ஆவது படத்திற்கு இசையமைக்கும் தமன் அந்தப்படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இது குறித்து தமன் பேசும் போது, “ ஒஸ்தி சாங்க்கு அப்புறமா விஜய் சார் நம்ம வொர்க் பண்ணலாம்னு சொன்னார். விஜய்க்காக சன்பிக்சர்ஸ் நிறுவனத்தோட ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு படம் பண்றதா இருந்துச்சு. அதுல நான்தான் மியூசிக் பண்றதா இருந்துச்சு.
ஆனா சில காரணங்களால அந்தப்படம் நடக்கல. அப்ப பீஸ்ட்க்கு அடுத்ததாக எந்த டைரக்டர் படம் இயக்குனாலும் அதுல நீங்கதான் மியூசிக்குன்னு விஜய் சார் எங்கிட்ட சொன்னாரு. தளபதி 66 படத்தோட கதையை நான் கேட்ட போது அசந்தே போயிட்டேன். அப்படி ஒரு கதை அது. படத்துல 6 சாங்ஸ் இருக்கு. அதுல 3 பாட்டு முடிச்சிட்டோம்.
கண்ணா இது என்னோட டைம்
அனிருத் விஜய்க்கு சூப்பரான பாடல்களை கொடுத்துருக்காரு. அதுக்கு ரீசன் அனிருத்தே விஜயோட பெரிய ஃபேன். ஃபேனா இல்லாம நீங்க அப்படிப்பட்ட பாடல்களை கொடுக்க முடியாது. ஆனா இது என்னோட டைம்.. இந்தப்படத்துல என்னோட இதயத்துல விஜய் சாரை எப்படி வச்சிருக்கேன் அப்படிங்கிறத என்னோட வொர்க் மூலமா காட்றேன். எல்லா பாட்டையும் ஹிட் ஆக்காம விட மாட்டேன். அனிட்டயும் நீ பண்ணிட்டல்ல நான் இப்ப பண்ற பாரு.. அப்படின்னு சொன்னேன். ஏன்னே நான் இதுக்காக ரொம்ப நாளா காத்திருந்திருக்கேன்.
தகவல் உதவி
விஜயுடன் கைகோர்க்கும் நட்சத்திரப்பட்டாளம்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகிய பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ந் தேதி வெளியாகியது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஜய் பிரபல தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத அந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் சரத்குமார், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இசையமைப்பாளாராக தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தளபதி 66 என்று அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஜய் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு ஹைதாரபாத் புறப்பட்டுச் சென்றார். படத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ்ராஜ் மற்றும் பிரபு ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்