ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்தில் தீர்ப்பு...5 வயது மகளைப் பிரியும் ஜி.வி பிரகாஷ்
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் பின்னணி பாடகி சைந்தவியின் விவாகரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

ஜி.வி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து தீர்ப்பு
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் பின்னணி பாடகி சைந்தவி (Saindhavi - G V Prakash) ஆகிய இருவரும் தங்கள் திருமண உறவை முடித்துக் கொள்ள இருப்பதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தனர். இந்த விவாகரத்து வழக்கு இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்தது. தங்களது 4 வயது மகள் அன்வியை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் கூறியிருந்த நிலையில், இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பள்ளி காலத்தில் இருந்து ஒன்றாக பயணித்து வந்த ஜி.வி மற்றும் சைந்தவி கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஜி.வி இசையமைத்த பல்வேறு பாடல்களை சைந்தவி பாடியுள்ளார். 12 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளார்கள். விவாகரத்திற்கு பின்பு இருவரது நட்பு தொடரும் என இரு தரப்பினரும் தெரிவித்துள்ளார்கள்.





















