மேலும் அறிய

AR Rahman: ரஜினிகாந்த் மகளா இருப்பது கஷ்டம்: எதை செய்தாலும் விமர்சனம்: ஐஸ்வர்யாவுக்காக பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்!

“அவருடைய மகளாக இருப்பது மிகவும் கடினம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நீங்கள் எதைச் செய்தாலும் விமர்சனங்களை எதிர்கொள்கிறீர்கள்” என ஏ.ஆர்.ரஹ்மான் பேசினார்.

லால் சலாம்:

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, நிரோஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம் (Lal Salam). ரஜினிகாந்த் கெளரவத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.  லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படம், வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். வழக்கமான கெளரவக் கதாபாத்திரங்களைப் போல் அல்லாமல் ரஜினியின் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே படத்தில் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.

ரஜினியைப் புகழ்ந்து தள்ளிய ரஹ்மான்:

அதன்படி, ”லால் சலாம் படத்தின் கதையை முதலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்னார். கதையை கேட்கும்போது எனக்கு முதலில் தயக்கம் இருந்தது. மேலும், லால் சலாம் படத்தின் கதை நல்நெறிகளை போதிக்கும் வகையில் இருந்ததால் பயந்தேன். படத்தை பார்த்தவுடன் எந்த இடத்தில் எல்லாம் சலிப்பா இருக்கும். என்று நினைத்தேனோ, அதெல்லாம் அருமையாக சுவாரஸ்யமாக இருந்தது.

இந்த படத்தை பார்த்தவுடன் யார் வசனம் எழுந்தியது? என்று ஐஸ்வர்யாவிடம்  கேட்டேன். அதற்கு நான் (ஐஸ்வர்யா) படத்திற்கு வசனம் எழுதினேன். அப்பா (ரஜினிகாந்த்) கொஞ்சம் மாற்றங்கள் செய்தார் என்று கூறினார். அப்போவே புரிந்தது, அவரது ஞானம் என்று உணர்ந்தேன். அனைத்தையும் மதித்து நடப்பதால், நன்கு ஆராய்ந்து பல அரிய விஷயங்களை சொல்லியிருக்கிறார். 

"சூப்பர் ஸ்டாரின் மகளாக இருப்பது கடினம்"

இந்த படத்திற்கு நான் வேலை பார்த்தது எனக்கு நன்றாக இருந்தது. ரஜினிகாந்த் 70's-களில் ஒரு ஸ்டைல் உருவாக்கியிருக்கிறார். அது தான் தற்போது வரை தொடர்கிறது. எல்லாரும் சொல்கின்ற மாதிரி நான் உங்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

நான் ஒவ்வொரு நிலம் வாங்கும்போதும், 'மண்ணின் மீது மனிதருக்கு ஆசை; மனிதன் மீது மண்ணிற்கு ஆசை' என்ற பாடல் தான் நினைவுக்கு வரும்” என்றார்.  தொடர்ந்து ஐஸ்வர்யா பற்றி பேசிய அவர், ”சூப்பர் ஸ்டாரின் மகள். அவருடைய மகளாக இருப்பது மிகவும் கடினம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நீங்கள் எதைச் செய்தாலும் விமர்சனங்களை எதிர்கொள்கிறீர்கள்.

நடனம், திரைப்படம் தயாரிப்பது, ஆடைகளை அணிவது போன்றவற்றால் நீங்கள் விமர்சிக்கப்படுகிறீர்கள். ஆனால், எல்லாவற்றையும் மீறி நீங்கள் உங்களை நிரூபித்திருக்கிறீர்கள்" என்று கூறினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

மேலும் படிக்க

Vijay Tamil Cinema: இனி விஜய் இல்லாத தமிழ் சினிமாவும் திரைத்துறை வணிகமும் எப்படி இருக்கும் தெரியுமா? ஒரு பார்வை

Lokesh Kanagaraj - Shruti Haasan: காதலர் தினத்துக்கு ரெடியாகும் லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதி: செம அப்டேட்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly Session LIVE: அடுத்த 2 ஆண்டுகளில், 10,000 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும் - முதல்வர் ஸ்டாலின்
அடுத்த 2 ஆண்டுகளில், 10,000 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும் - முதல்வர் ஸ்டாலின்
PM Modi:140 கோடி மக்களின் கனவை நனவாக்க எம்.பி.க்கள் உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி  வலியுறுத்தல்!
140 கோடி மக்களின் கனவை நனவாக்க எம்.பி.க்கள் உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி  வலியுறுத்தல்!
Amudha IAS : “அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின் ? அமுதா ஐ.ஏ.எஸ் மாற்றமா?’ பரபரக்கும் கோட்டை..!
Amudha IAS : “அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின் ? அமுதா ஐ.ஏ.எஸ் மாற்றமா?’ பரபரக்கும் கோட்டை..!
Salem Leopard: சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya | Trichy Surya | NEET PG exam cancelled | ”மோடியுடன் போராடும் நேரம்” கொந்தளிக்கும் ராகுல், ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Session LIVE: அடுத்த 2 ஆண்டுகளில், 10,000 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும் - முதல்வர் ஸ்டாலின்
அடுத்த 2 ஆண்டுகளில், 10,000 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும் - முதல்வர் ஸ்டாலின்
PM Modi:140 கோடி மக்களின் கனவை நனவாக்க எம்.பி.க்கள் உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி  வலியுறுத்தல்!
140 கோடி மக்களின் கனவை நனவாக்க எம்.பி.க்கள் உழைக்க வேண்டும் - பிரதமர் மோடி  வலியுறுத்தல்!
Amudha IAS : “அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின் ? அமுதா ஐ.ஏ.எஸ் மாற்றமா?’ பரபரக்கும் கோட்டை..!
Amudha IAS : “அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின் ? அமுதா ஐ.ஏ.எஸ் மாற்றமா?’ பரபரக்கும் கோட்டை..!
Salem Leopard: சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
சேலத்தில் உலா வரும் சிறுத்தை - தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறை..
Lionel Messi Birthday: உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
உயரமே கால்பந்துக்கு தடை... பயிற்சியாளரிடம் கெஞ்சிய பாட்டி.. மெஸ்ஸி சந்தித்த அவமானமும்.. வெகுமானமும்!
Shocking Video: பெண் டோல் கேட் ஊழியரை இடித்த கார்.. தடுக்க முயன்ற நபர் கொலை.. அதிர்ச்சி வீடியோ!
பெண் டோல் கேட் ஊழியரை இடித்த கார்.. தடுக்க முயன்ற நபர் கொலை.. அதிர்ச்சி வீடியோ!
Latest Gold Silver Rate: வாரத்தின் முதல் நாள்.. தங்கம் விலையில் ஏற்றம்.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
வாரத்தின் முதல் நாள்.. தங்கம் விலையில் ஏற்றம்.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
Kanguva: “எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
“எங்க அண்ணனை விட்டுருங்க” - ஞானவேல்ராஜாவை கடுமையாக விமர்சித்த சூர்யா ரசிகர்கள்!
Embed widget