பாஜகவில் ஏ.ஆர் ரகுமான்? எல் முருகனுடன் திடீர் சந்திப்பு! பின்னணி என்ன?
தற்போது இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மத்திய இணையமைச்சர் எல் முருகனை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மத்திய இணையமைச்சர் எல் முருகனை நேரில் சந்தித்து தனிமையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
பிரபலங்களை டார்கெட் செய்யும் பாஜக
2026 தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் பாஜக வேரூன்ற பல யுத்திகளை கையில் எடுத்துள்ளது. அதில் ஒரு முதற்கட்டமாக திரைத்துறையினரை தங்கள் கட்சிக்குள் இழுத்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்க்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே குஷ்பூ, நமீதா, ராதிகா சரத்குமார் என பிரபல நடிகைகள் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இன்னும் சிலரை பாஜக குறிவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகை மீனா பாஜகவில் இணைய போவதாகவும் அவருக்கு இணை அமைச்சர் பதவி வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மீனா டெல்லி சென்று ஜகதீப் தன்கரை சந்தித்தது இதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நயினார் நாகேந்திரன் தலைவரானதை தொடர்ந்து பாஜக வில் புதிதாக 28 பதவிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது தான் மீனா உள்ளிட்டோருக்கு பதவி வழங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
எல்.முருகன் - ஏ.ஆர் ரகுமான் சந்திப்பு:
இதனையடுத்து தற்போது இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மத்திய இணையமைச்சர் எல் முருகனை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. பிரபல திரை நட்சத்திரங்கள் வரிசையாக பாஜக வில் இனைந்து வரும் நிலையில் ஏ ஆர் ரஹ்மானும் பாஜக வலையில் சிக்கிவிட்டாரா என அனைவரும் கேள்விகளை அடுக்கிய நிலையில், இந்த சந்திப்பிற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் குறும்படமான சத்யம் சிவம் சுந்தரம் எனும் படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கொடுத்துள்ளார். இதன் காரணமாக நிகழ்ந்த மரியாதை நிமித்த சந்திப்பு தான் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாதது குறிப்பிடத்தக்கது.






















