உங்களுக்கு போட்டியா எங்க அண்ணன் வரான்...ரீல்ஸ் போட்ட சிறுவர்கள்..அனிருத் கொடுத்த பதிலை பாருங்கள்
இன்ஸ்டாகிராமில் பள்ளி சிறுவர்கள் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவிற்கு இசையமைப்பாளர் அனிருத் பதிலளித்துள்ள நிகழ்வு ரசிகர்களை கவர்ந்துள்ளது

அனிருத்தை குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் சிறுவர்கள் விளையாட்டாக போட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிய நிலையில் இந்த வீடியோவிற்கு அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில் இருந்து பதிலளித்துள்ளார். அவரது இந்த ட்வீட் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது
சமூக வலைதளங்களுக்கு முன்பு நட்சத்திரங்களை நாம் திரையில் பார்ப்பதோ சரி. அவர்களுடன் நேரடியான உரையாடல் என்பது அசாத்தியமானதாக இருந்தது. ஆனால் இன்று இன்ஸ்டாகிராம் , எஸ்க் , பேஸ்புக் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்கள் விரும்பும் பிரபலங்களின் கவனத்தை எப்படியானவது தங்கள் பக்கம் இழுத்துவிடுகிறார்கள். குறிப்பாக இன்ஸ்டாகிராம் சாமானிய மக்கள் பிரபலங்களை அனுகுவதற்கு ஒரு எளிய களமாக உருமாறியுள்ளது. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியீட்ட இரண்டு சிறுவர்கள் கோலிவுட்டின் படு பிஸியான இசையமைப்பாளர் அனிருத்தின் கவனத்தையே ஈர்த்துள்ளார்கள்
ரீல்ஸ் வெளியிட்ட சிறுவர்கள்
இன்ஸ்டாகிராமில் டாக் வித் தேவா என்கிற கணக்கில் இரண்டு சிறுவர்கள் தொடர்ச்சியாக வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். பள்ளிக்கு சென்றுவிட்டு செல்ஃபோனை வைத்து இருவரும் குட்டி குட்டியாக பேசி வெளியிட்ட ரீல்ஸ் பரவலாக கவனமீர்க்க பெரியளவில் ஃபாலோவர்ஸை ஈர்த்தனர் இந்த சிறுவர்கள். அண்மையில் தாங்கள் வாங்கிய புதிய கீபோர்ட் ஒன்றை வாசித்து ரீல்ஸ் வெளியிட்டிருந்தனர். அதில் 'இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டி. ஒன்று அனிருத் இன்னொன்று எங்கள் அண்ணன்' என்று அவர்கள் வெளியிட்ட வீடியோ பரவலாக ஷேட் செய்யப்பட்டது. ரசிகர்கள் இந்த வீடியோவை அனிருத் கண்ணில் படும்வரை ஷேட் செய்தனர்.
அனிருத் கொடுத்த ரியாக்ஷன்
ஒரு சில நாட்களிலேயே இந்த ரீல்ஸ் அனிருத் கண்ணில் பட அவர் இந்த வீடியோவிற்கு செம க்யூட்டான ரியாக்ஷன் ஒன்று கொடுத்துள்ளார் தனது எக்ஸ் பதிவில் "சூப்பர் டா தம்பி , க்யூட்டீஸ் ' என்று அனிருத் இந்த வீடியோவிற்கு பதிவிட்டுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அனிரூத் இதை பார்க்கும் வரை பகிருங்கள் 😂🤣😝 pic.twitter.com/UbSuR6jM8y
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) January 17, 2026
ஜெயிலர் 2 , தலைவர் 173 , டிசி , கிங் என அடுத்தடுத்து பிரம்மாண்டமான படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் தனது பிஸியான நேரத்திலும் குழந்தைகளை மகிழ்வித்த செயல் ரசிகர்களால் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது





















