மேலும் அறிய

Movie Release Today: சினிமா ரசிகர்களே.. இன்று மட்டும் 16 படங்கள் ரிலீஸ்.. என்னென்ன தெரியுமா?

Movie Release Today Tamil, Nov 24: நவம்பர் 24 ஆம் தேதியான இன்று மட்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகியமொழிகளை சேர்த்து மொத்தம் 17 படங்கள் ரிலீசாகிறது.

நவம்பர் 24 ஆம் தேதியான இன்று மட்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை சேர்த்து மொத்தம் 17 படங்கள் சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது. 

80ஸ் பில்டப் 

குலேபகாவலி, ஜாக்பாட் படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் “80ஸ் பில்டப்”. இந்த படத்தில் சன் டிவியில் பிரபல சீரியலான பூவே உனக்காக தொடரில் நடித்த ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, முனீஸ்காந்த், மயில்சாமி, கூல் சுரேஷ் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள 80ஸ் பில்டப் படமானது 1980கள் காலக்கட்டத்தில் சினிமா மீதான மோகம் கொண்ட ரசிகர்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

காதல் தி கோர் 

தி கிரேட் இந்தியன் கிச்சன் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்ற ஜியோ பேபி, நடிகர் மம்மூட்டியை வைத்து “காதல் தி கோர்” என்ற படத்தை எடுத்துள்ளார். ஜோதிகா இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் இந்த படம் நேற்று (நவம்பர் 23) தியேட்டரில் வெளியாகி விட்டது. தன் பாலின உணர்வுகளை பற்றி பேசும்  காதல் தி கோர் படத்தை மம்மூட்டி சொந்தமாக தயாரித்துள்ளார். 

ஜோ

ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ, மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா, அன்பு  உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “ஜோ”. சித்துகுமார் இசையமைத்துள்ள இப்படம் தமிழ்நாட்டு பையனுக்கும்,  கேரளாவைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல் கலவரங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

குய்கோ 

இயக்குநர் அருள் செழியன் இயக்கத்தில் நடிகர்கள் விதார்த், யோகிபாபு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் “குய்கோ”. அந்தோனி தாசன், கேவின் மிரண்டா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். சௌதிக்கு சென்று பணக்காரர் ஆகும் யோகிபாபு தன் தாயார் மரணத்துக்கு சொந்த ஊர் திரும்புகிறார். வந்த பார்த்தால் தாயின் உடல் காணாமல் போகிறது இதனைத் தொடர்ந்து என்ன நடக்கும் என்பதே இப்படத்தின் கதையாகும்.

சில நொடிகளில்

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, புன்னகை பூ கீதா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் ‘சில நொடிகளில்’. இந்த படத்துக்கு மசாலா காபி, பிஜோர்ன் சுர்ராவ், தர்ஷனா கேடி, ஸ்டாக்காடோ, ரோஹித் மாட் உள்ளிட்ட 5 பேர் இசையமைத்துள்ளனர். மனைவிக்கு கணவர் செய்யும் துரோகத்துக்கு பாடம் கற்பிக்கும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

லாக்கர் 

ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கியுள்ள படம் “லாக்கர்”. இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விக்னேஷ் சண்முகம், நிரஞ்சனி அசோகன், சுப்பிரமணியன் மாதவன், நிவாஸ் ஆதித்தன், தாஜ் பாபு ஆகியோர் நடித்துள்ளனர். வைகுந்த் ஸ்ரீனிவாசன் இசையமைத்துள்ளார். சட்ட விரோத செயல்களை செய்யும் ஒரு இளைஞன் வாழ்க்கையில் பெண் வந்தால் என்ன நடக்கும் என்பதை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. 

Nepolean (ஹாலிவுட்) 

ஹாலிவுட்டில் ஜாக்குன் போனிக்ஸ், வேசன்னெ கிர்பி, யூசூப் கெக்கோர், மேத்யூ நீதம் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள படம் நெப்போலியன் (Nepolean). ரிட்லி ஸ்காட் இயக்கியுள்ள இப்படம் சுமார் 200 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றை மையப்படுத்திய இப்படத்தின் ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் பிரமாண்டத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலே குறிப்பிட்டப்பட்ட முக்கிய படங்களை தவிர்த்து அழகாய் பூக்குதே (தமிழ்), wish (ஹாலிவுட்), ஃபெர்ரே (இந்தி), கொடபொம்மலி பிஎஸ் (தெலுங்கு), ஆதிகேசவா (தெலுங்கு), ஸ்டார் ஃபிஷ் (இந்தி), தி ட்ரையல் (தெலுங்கு), ஆட்ரிஷய ஜலகங்கள் (மலையாளம்), ஜிம்மா 2 (மராத்தி), பெர்ஃப்யூம் (தெலுங்கு) என அனைத்து மொழிகளையும் சேர்த்து 17 படங்கள் ரிலீசாகியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
எனக்கு தெரியாது; சி.எம்.தான் முடிவெடுக்கனும்! - பொங்கல் பரிசுத் தொகை குறித்து துணை முதலமைச்சர் பதில்! 
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN Assembly Session LIVE: தொடங்கியது சட்டப்பேரவை - யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தனித்தீர்மானம்!
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
TN birth Rate: சரியும் குழந்தை பிறப்பு விகிதம், தமிழக அரசே காரணம்? ஸ்ரீதர் வேம்புவின் தீர்வுகள், உண்மையா? சாத்தியமா?
Embed widget