IMDb கணிப்பின்படி, 2022-இல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்கள் இவைதான்!
பல பெரிய பட்ஜெட் படங்கள் 2022ல் திரைக்கு வர இருப்பதை அடுத்து அவற்றை திரையரங்குகளில் வெளியிடுவதற்காக முன்கூட்டியே அரங்குகள் திறக்கப்பட்டன
![IMDb கணிப்பின்படி, 2022-இல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்கள் இவைதான்! Most Anticipated Indian Movies Of 2022, According To IMDb IMDb கணிப்பின்படி, 2022-இல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்கள் இவைதான்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/20/1f75d4e000fa0c7ff19ec21a844be7fb_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு கடந்த ஆண்டின் இறுதியில்தான் ஆங்காங்கே சில தியேட்டர்கள் திறக்கப்பட்டன. பல பெரிய பட்ஜெட் படங்கள் 2022ல் திரைக்கு வர இருப்பதை அடுத்து அவற்றை திரையரங்குகளில் வெளியிடுவதற்காக முன்கூட்டியே அரங்குகள் திறக்கப்பட்டன எனலாம். இவற்றில் சில மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் என்கிற பட்டியலை ஐஎம்டிபி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கேஜிஎஃப் 2
கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் கேஜிஎப். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என வெளியாகிய அனைத்து மொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படம் அடுத்த பாகத்திற்கான தொடர்ச்சியுடன் முடிக்கப்பட்டிருக்கும். இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டது.ஊரடங்கு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும் இரண்டாண்டுகளாக தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு ஓரளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நிலையில், கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு சமீபத்தில் அறிவித்தது. வரும் 2022ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி இந்த படத்திற்கான இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆர் ஆர் ஆர்
பாகுபலி’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் இயக்குநர் ராஜமௌலி. தெலுங்கில் மட்டும் தெரிந்த முகமாய் இருந்த ராஜமௌலி, பாகுபலிக்கு பிறகு அவர் அடுத்த என்ன படம் இயக்குவிருக்கிறார் என்ற ஆவலுடன் இருந்த நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்.,’ என்ற பிரமாண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. அந்தப் படத்தில் பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்தனர். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்டில், உக்ரைனில் படத்தின் கடைசி ஷெட்யூல் முடிந்தது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம், கடந்தாண்டு அக்டோபர் 13ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு, பல காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. டிரைலர் வெளியாகி படத்தின் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள குஷியில் ரசிகர்கள் இருந்தனர். படத்திற்கான புரோமோஷனில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மும்பை என ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டீஆர் பறந்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், கொரோனா, ஒமிக்ரான் காரணமாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லால் சிங் சத்தா
ஆமீர் கான் கரீனா கபூர் நடிப்பில் ஏப்ரல் 14ல் வெளியாக இருக்கும் இந்தப் படம் ஹாலிவுட்டில் 1995ல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஃபாரஸ்ட் கம்ப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது
கங்குபாய் கத்தியாவாடி
மும்பையின் மாஃபியா ராணியாகக் கருதப்பட்டு கங்குபாய் கத்தியாவாடி என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் 18 பிப்ரவரி 2022ல் திரைக்கு வர இருக்கிறது. ஆலியா பட் இந்தப் படத்தின் மையப் பாத்திரமாக நடிக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)