'மூப்பில்லா தமிழே, தாயே..' - என்ஜாய் எஞ்சாமிக்கு பிறகு அடுத்த அதிரடி.. வெளியாகிறது ரஹ்மானின் புதிய ட்ராக்..

ட்ராக்கின் டீசரை கடந்த புதன்கிழமையன்று தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட்டிருந்தார் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான்

FOLLOW US: 

'மூப்பில்லா தமிழே தாயே' என்ற புதிய ட்ராக்கின் டீசரை கடந்த புதன்கிழமையன்று தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட்டார் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான். என்ஜாய் எஞ்சாமி என்ற பாடலின் வெற்றிக்குப் பிறகு ரகுமானின் மஜ்ஜா நிறுவனத்தின் கீழ் வெளியாகும் அடுத்த ம்யூசிக் ட்ராக் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அமித் கிருஷ்ணன் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்த அந்த பாடலுக்கு பாடகி தீ மற்றும் பாடகர் அறிவு குரல்கொடுத்தனர். இணையத்தில் பல மில்லியன் வியூஸ்களை தொடர்ந்து அந்த பாடல் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. மூப்பில்லா தமிழே, தாயே..' - என்ஜாய் எஞ்சாமிக்கு பிறகு அடுத்த அதிரடி.. வெளியாகிறது ரஹ்மானின் புதிய ட்ராக்..

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் ரகுமான் தனது மஜ்ஜா நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்த ட்ராக் பாடல் ஒன்றை விரைவில் வெளியிடவுள்ளார். 'மூப்பில்லா தமிழ் தாயே' என்ற அந்த ட்ராக் பாடல் தமிழ் மொழியின் பெருமையை பறைசாற்றும் பாடலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 14-ஆம்  தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அந்த பாடலின் டீஸர் வெளியான நிலையில், ரகுமானின் ரசிகர்கள் மட்டுமின்றி பலராலும் அந்த டீஸர் விரும்பப்பட்டுள்ளது. மூப்பில்லா தமிழே, தாயே..' - என்ஜாய் எஞ்சாமிக்கு பிறகு அடுத்த அதிரடி.. வெளியாகிறது ரஹ்மானின் புதிய ட்ராக்..

'புயல் தாண்டியே விடியல்.. புது வானில் விடியல்.. பூபாளமே வா, தமிழே வா. தரணியான தமிழே வா' என்ற வரிகளை ரகுமான் பாட  பின்னணியில் ஒலிக்கும் நாதஸ்வர இசை அவர் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. கடற்கரை படகில் ரகுமான் நின்றுகொண்டு பாடும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பல படங்களுக்கு இசையமைத்த ரகுமான், அண்மையில் 99 சாங்ஸ் என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 16-ஆம் தேதி வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Tags: Maaja Enjoy Enjami AR Rahuman Rahuman Moopila Thamizhe Thaye

தொடர்புடைய செய்திகள்

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

மனதை கரைய வைக்கும் பிரதீப் குமாரின் ப்ளேலிஸ்ட் !

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இன்னொரு குவாரண்டைன் பாக்கப் போறோம் : பிக்பாஸ் சீசன் 5 எப்போ நடக்கும்?

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

இரவு நேரத்தை பொன்னாக்கும் ஹரிஷ் ராகவேந்திரா ப்ளேலிஸ்ட் !

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

டாப் நியூஸ்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடியைச் சந்தித்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

CBSE Class 12 Results Date: சி.பி.எஸ்.இ +2 மதிப்பெண் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

காவியுடை படத்தால் சர்ச்சை : எதிர்ப்புகளால் வெள்ளை உடைக்கு மாற்றப்பட்ட திருவள்ளுவர்..!

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !

‛தீவு பரிசு... நோ டாட்டூ... சில்வர் ஷூ ரிட்டன்’ ப்ப்ப்பா.... என்ன மனிதரப்பா இந்த ‛ரொனால்டோ’ !