Watch video : மூப்பில்லா தமிழே.. தாயே.. தமிழக முதலமைச்சரை சந்திந்த ஏ.ஆர் ரஹ்மான்.. ஒரு மாஸ் மீட்டிங்
துபாயில் உள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவிற்கு மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிற்கான அரங்கை திறந்து வைத்துள்ளார். அப்போது, துபாயில் உள்ள தனது ஸ்டூடியோவிற்கு வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார்.
அங்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வரும் மூப்பில்லா தமிழே தாயே என்ற ஆல்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரையிட்டு காண்பித்தார். தற்போது, அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
துபாயில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் அழைப்பை ஏற்று அவரது அரங்கத்திற்குச் சென்ற முதலமைச்சர் @mkstalin .. அவருக்கு “மூப்பில்லா தமிழே.. தாயே” பாடலை திரையிட்டுக் காட்டினார் ரஹ்மான்..#ARRahman #MKStalin #MoopillaThamizheThaye #தமிழ்வாழ்க pic.twitter.com/OF7EFUFzro
— Krishna Kumar (@k_for_krish) March 25, 2022
மூப்பில்லா தமிழே தாயே முழுப்பாடல் :
துபாயில் ஒலித்த தமிழ் :
துபாய் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் ஒளிர்ந்த தமிழ்.. ❤️❤️❤️#தமிழ்வாழ்க pic.twitter.com/ZXkkqcQfez
— Krishna Kumar (@k_for_krish) March 25, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்