ப்ரோமோஷனே இல்லை ,புதுமுக நடிகர்கள் , முதல் நாளில் குவிந்த வசூல்..காதலர்களை கவர்ந்த சாயாரா பட விமர்சனம்
இந்தியில் ஆஷிகி 2 திரைப்படத்தை இயக்கி இளைஞர்களிடம் கவனமீர்த்த மோகித் சுரி இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள 'சாயாரா' திரைப்படம் கவனமீர்த்துள்ளது

காதல் கதைகளைப் பொறுத்தவரை அரைத்த மாவை திருப்பி திருப்பி அரைத்து வந்தது பாலிவுட். அந்த வகையில் நீண்ட நாட்கலுக்கு பின் இந்தியில் வெளியாகியுள்ள ரொமாண்டிக் படம் ஒன்று ரசிகர்களை கவர்ந்துள்ளது. பிரபல நடிகை அனன்யா பாண்டேவின் சகோதரன் ஆஹான் பாண்டே நாயகனாக நடித்து அனீத் பட்டா நாயகியாக நடித்துள்ள சாயாரா திரைப்படம் இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
சாயாரா
இந்தியில் மர்டர் 2 , ஆஷிக்கி 2 , மலங் , உள்ளிட்ட பல ரொமாண்டிக் படங்களை இயக்கியுள்ளார் இயக்குநர் மோகித் சுரி . 2013 ஆம் ஆண்டு வெளியான ஆஷிகி 2 திரைப்படமும் இப்படத்தின் பாடல்களும் இளைஞர்களிடம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. 12 வருடங்களுக்குப்பின் அவரது சாயாரா திரைப்படம் காதல் ஜோடிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. அண்மைக் காலங்களில் வெளியாகும் ரொமாண்டிக் திரைப்படங்கள் சோசியல் மீடியா கலாச்சாரத்தை மையமாக வைத்தே உருவாகின்றன. அந்த வகையில் சாயாரா திரைப்படம் மேலும் உணர்வுப்பூர்வமான ஒரு காதல் கதையை மையமாக கொண்டிருக்கிறது. சிறு வயதில் இருந்தே பல சவால்களை வளர்ந்து வரும் நாயகன் ஒரு இசை கலைஞனாக வளர்ந்து வருகிறார். மறுபக்கம் நாயகிய ஒரு பத்திரிகையாளராக இருக்கிறார். காதல் இவர்களை இணைக்கிறது , இருவரும் ஒருவரை ஒருவர் முழுமை செய்துகொள்கிறார்கள். ஆனால் இந்த காதலர்களில் ஒருவர் தனது நினைவுகளை இழக்கத் தொடங்கினால் அதை மற்றொருவர் எப்படி எதிர்கொள்வார் என்பதே படத்தின் கதை.
சாயாரா திரைப்பட விமர்சனம்
உணர்ச்சிகரமான காதல் கதை , சூப்பர்ஹிட் பாடல்கள் இளைஞர்களிடம் இப்படத்திற்கு பெரிய வரவேற்பைப் பெற்று தந்துள்ளது. இப்படத்திற்கு ஃபஹீ ம் அப்துல்லா, அர்ஸ்லான் நிஜாமி, சசெட்-பரம்பரா, மித்தூன், தனிஷ்க் பாக்சி, விஷால் மிஸ்ரா என ஆறு பேர் இசையமைத்துள்ளார்கள். அறிமுக நடிகர்களுக்கு ரசிகர்களில் இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. நாயகனாக நடித்துள்ள ஆஹான் பாண்டே ஒரு தேர்ந்த நடிகராக அதே நேரத்தில் ஒரு ஸ்டாருக்கான கவர்ச்சியையும் கொண்டிருக்கிறார். நாயகி அனீத் பட்டா இப்படத்தை தனது நடிப்பால் தாங்கி நிற்கிறார். எந்த பெரிய ஸ்டாரும் , பிரம்மாண்ட ப்ரோமோஷனும் இல்லாமலே இந்த ஆண்டு வெளியான பட படங்களைக் காட்டிலும் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டியுள்ளது சாயாரா திரைப்படம் .
⭐️ No franchise power.
— taran adarsh (@taran_adarsh) July 19, 2025
⭐️ No A-listers or popular stars.
⭐️ No festival or holiday release.
⭐️ No city tours, media interviews, or reel collaborations.
Yet, #Saiyaara – starring newcomers – CREATES HISTORY... Yes, #Saiyaara is the BIGGEST OPENER EVER for a film headlined by… pic.twitter.com/Q6tc3z5KjW





















