மேலும் அறிய

Social Media: வன்ம தளங்களாக மாறும் சமூக வலைதளங்கள்! எங்கே போகிறது இளைய தலைமுறை?

சமீபகாலமாக சமூக வலைதளங்களில் தனிநபர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருவது சமூக வளர்ச்சிக்கு ஆரோக்கியமற்ற போக்காக கருதப்படுகிறது.

21ம் நூற்றாண்டில் பொதுமக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதப்படுவது சமூக வலைதளங்கள். உலகின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் அனைத்து மக்களையும் ஒரு புள்ளியில் இணைக்கும் ஒரு பாலமாக இருப்பது சமூக வலைதளங்கள். வெளியில் தெரியாத அவலங்களை வெளி உலகத்திற்கு எடுத்துரைக்கவும், நல்ல விஷயங்களை அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்டதே இந்த சமூக வலைதளங்களின் மிகவும் முக்கியமான நோக்கமாக உள்ளது.

வன்மங்களை பரப்பும் தளமாக மாறும் வலைதளங்கள்:

ட்விட்டர் எனப்படும் எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களே இன்று உலகில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வலைதளங்களாக உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த வலைதளங்களை ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர்.

தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் எக்ஸ் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீபகாலமாக சமூக வலைதளங்கள் வன்மங்களை பரப்பும் தளமாக மாறி வருகிறது. குறிப்பாக, பிரபலங்களை தரக்குறைவாகவும், அவதூறாகவும் விமர்சிப்பதற்குமே தற்போது அதிகளவில் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தனிநபர் தாக்குதல்:

நேற்று முதல் எக்ஸ் தளத்தில் தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரங்களான ரஜினிகாந்தையும், விஜய்யையும் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர். இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் என்ற போர்வையில் சில விஷமிகள் ஒருவரை ஒருவர் மாறி, மாறி மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சித்து வருகின்றனர். முகம் சுளிக்கும் வகையில் தரக்குறைவான வார்த்தைகளாலும், வீடியோக்களாலும் விமர்சனங்களை மாறி, மாறி விமர்சித்து வருகின்றனர்.

நடிகர்கள் மட்டுமின்றி ஏதாவது ஒரு நிகழ்வு அரங்கேறும்போது அந்த நிகழ்வுக்கு தொடர்பான நபர்களை பாராட்டி சிலரும், அவர்களை சரமாரியாக விமர்சித்து சிலரும் கருத்துக்களையும், மீம்ஸ்களாகவும் பதிவிட்டு வருகின்றனர். எந்தவொரு செயலையும் அடுத்தவர் மனம் புண்படாத வகையில் விமர்சிக்க நமக்கு உரிமை உண்டு. ஆனால், முகம் சுளிக்கும் வகையிலும், தரக்குறைவாக பேசவோ யாருக்கும் உரிமை இல்லை.

ஆரோக்கியமற்ற போக்கு:

இன்றைய காலத்தில் சமூக வலைதளங்கள் குறிப்பாக எக்ஸ் தளத்தில் மிக மோசமான கருத்துக்களை, தனிநபர் மீதான தாக்குதலை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற கருத்துக்கள் வளரும் சமுதாயத்தினரை தவறான பாதையில் வழிநடத்தும் வகையில் அமைகிறது. சில விஷமிகள் தனிநபர்கள் தாக்குதலை நடத்தி வீண் பதற்றத்தையும், நேர விரயத்தையும், ஒரு நபரின் மீதான மதிப்பை குறைக்கும் செயலையும் செய்து வருகின்றனர்.

நல்ல ஆரோக்கியமான விஷயங்களை அடுத்தவரிடத்தில் கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்களின் அடிப்படை நோக்கத்திற்கு நேர் எதிராக ஒரு தனிப்பட்ட நபரின் செல்வாக்கை குறைக்கும் நோக்கத்திற்காகவே தற்போது பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் ஆரோக்கியமான சமுதாய வளர்ச்சிக்கும், இளைஞர்களின் மனநலனுக்கும் இது மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால், இதுபோன்ற செயலில் ஈடுபடும் விஷமிகள் இந்த செயலை தவிர்க்க வேண்டியது அவசியம் ஆகும். மேலும், சமூக வலைதளங்களும் இதுபோன்ற அவதூறு பரப்புபவர்களை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம் ஆகும். ஆரோக்கியமான சமுதாய வளர்ச்சிக்கு சமூக வலைதளங்களும் ஆரோக்கியமான பாதையில் செல்ல வேண்டியது அவசியம் ஆகும்.

மேலும் படிக்க: EPS Statement: ”பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கிடுக; கரும்பு நேரடி கொள்முதல்" - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

மேலும் படிக்க: Jallikattu 2024 Date: ஓரம்போ... ஓரம்போ... வருகிறது ஜல்லிக்கட்டு போட்டி - எங்கே? எப்போது? தேதிகள் அறிவிப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget