![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Watch Video : மைம் மூலம் காதலை வெளிப்படுத்திய கோபி... கண்கலங்கிய போட்டியாளர்கள்... களைகட்டிய குக் வித் கோமாளி மேடை
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் அவ்வப்போது மைம் கோபி தனது அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.
![Watch Video : மைம் மூலம் காதலை வெளிப்படுத்திய கோபி... கண்கலங்கிய போட்டியாளர்கள்... களைகட்டிய குக் வித் கோமாளி மேடை Mimi Gopi's extraordinary acting in Cook With Comali Show yesterday has stolen all the hearts Watch Video : மைம் மூலம் காதலை வெளிப்படுத்திய கோபி... கண்கலங்கிய போட்டியாளர்கள்... களைகட்டிய குக் வித் கோமாளி மேடை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/20/6103663272d74ace7e416f43d60204bf1676906181065224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி 4’ நிகழ்ச்சி. இதுவரையில் ஒளிபரப்பான மூன்று சீசன்களும் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பானதை தொடர்ந்து கடந்த ஜனவரி இறுதியில் தொடங்கி கோலாகலமாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி சீசன் 4.
குக்காக களமிறங்கிய வில்லன் :
ஒவ்வொரு சீன்களிலும் பல திறமையான பிரபலங்கள் கலந்து கொண்டு கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் இந்த சீசன் குக்குகளில் ஒருவராக உற்சாகத்துடன் கலந்து கொண்டுள்ளார் மைம் கோபி. பல திரைப்படங்களில் வில்லனாக பரிச்சயமான ஒரு முகம் மைம் கோபி. பல திரில்லர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் அவ்வப்போது மைம் கோபி தனது அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அசத்தலாக மைம் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
மைம் கோபியின் கற்பனை கதை :
ஒரு ரோட்டு கடையில் வேலை செய்யும் ஒரு பையன் தனக்கு காதல் இல்லை என மிகவும் வருத்தத்தில் இருக்கிறான். பார்க்கவும் கொஞ்சம் அழகில்லாமல் இருக்க கூடிய அந்த பையனுக்கு ஒரு பெண் வந்து லவ் லெட்டர் கொடுக்கிறாள். அந்த லவ் லெட்டர் வாங்கியதும் அந்த பையனின் பீலிங் எப்படி இருக்கும். லவ் லெட்டர் கொடுத்துவிட்டு அந்த பெண் ஓடிவிடுவாள் அதனால் அவன் அந்த பெண்ணின் முகத்தை கூட சரியாக பார்த்து இருக்க மாட்டான் அந்த பையன். ஆனா லவ் லெட்டரை மட்டும் பார்த்து இருப்பான். அப்போது அவனுடைய உணர்வு எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனையை மிகவும் தத்ரூபமாக மைம் செய்து காட்டினார். அவரின் இந்த அசாதரணமான நடிப்பை பார்த்து கண்கலங்கி அனைவரும் பாராட்டினார்கள்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் :
இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பலரின் வெளிவராத திறமைகளும் உலகத்திற்கு வெளிப்படுத்த சிறந்த மேடையாக விளங்குகிறது. சமையல் ஷோ என்றாலும் அதில் கலகலப்பு, சுவாரஸ்யம் அவை அனைத்தையும் தாண்டி பார்வையாளர்களின் மனஅழுத்தம் மொத்தமாக குறைக்கும் ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)