Vadakkupatti Ramasamy Update: சந்தானத்தின் ஜோடியாகிறார் சிம்பு ஹீரோயின்... வடக்குப்பட்டி ராமசாமி படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்
வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடிகர் சந்தானம் ஜோடியாகிறார் நடிகை மேகா ஆகாஷ்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ஒரு நகைச்சுவை நடிகராக அடியெடுத்து வைத்து பின்னர் நட்சத்திர நடிகராக தனக்கென ஒரு ஸ்டைல், ட்ரெண்ட் செட் செய்து அதில் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வெற்றி நடை போடும் ஒரு நடிகர் சந்தானம்.
சமீபத்திய ரிலீஸ் :
சில காலமாக ஹீரோக்களோடு இணைந்து காமெடி ட்ராக் செய்வதை கைவிட்டு தானே ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்க இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான திரைப்படம் 'குலுகுலு'. அதனை தொடர்ந்து அவரின் பல படங்கள் வெளியாக மிகவும் மும்மரமாக தயாராகி வருகின்றன.
Excited to join the team of #VadakkupattiRamasamy with @iamsanthanam directed by @karthikyogitw 🥳 🤍🔥
— Megha Akash (@akash_megha) February 6, 2023
Produced by @peoplemediafcy.@vishwaprasadtg @vivekkuchibotla @nuttypillai @negativespace04@EditorShivaN @RSeanRoldan #Rajesh @sherif_choreo @Maheshmathewmms@DoneChannel1 pic.twitter.com/Q6qQozZQFt
சந்தானத்தின் ஜோடி யார்?
அந்த வகையில் நடிகர் சந்தானம் தற்போது நடித்து வரும் திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. பீப்பிள் மீடியா ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை இயக்குகிறார் டிக்கிலோனா திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் யோகி. ஜான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் T.சிவானந்தீஸ்வரன். வடக்குப்பட்டி ராமசாமி படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிகர் சந்தானம் ஜோடியாக இணைகிறார் மேகா ஆகாஷ் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். ஷூட்டிங் ஸ்பாட்டில் மேகா ஆகாஷ் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
View this post on Instagram
நடிகர் சந்தானம் நடிப்பில் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ள 15வது திரைப்படம் 'கிக்'. இப்படத்தின் பணிகள் முழுமையாக முடிவடைந்து வெளியாக தயாரான நிலையில் உள்ளது. மேலும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து சுந்தர்.சி இயக்கும் அரண்மனை 4 படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் கிசுகிசுக்கப்படுகின்றன என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.