Marvel What If Series: மார்வெல் ரசிகர்கள் காட்டில் மழை.. வாட் இஃப் சீரிஸ் சீசன் 2 - 9 நாட்களில் 9 எபிசோட்கள் : தரமான டிரெய்லர்
Marvel What If Series: மார்வெல் நிறுவனத்தின் வாட் இஃப் சீரிஸின் இரண்டாவது சீசனுக்கான டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Marvel What If Series: மார்வெல் நிறுவனத்தின் வாட் இஃப் சீரிஸின் இரண்டாவது சீசன், கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி ப்வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்வெல் நிறுவனம்:
சூப்பர் ஹீரோக்களை மையமாக கொண்டு படங்களை வெளியிட்டு வரும் மார்வெல் நிறுவனம், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளது. ஆரம்பத்தில் படங்களை மட்டுமே வெளிவந்த அந்நிறுவனம், எண்ட் கேமிற்கு பிறகு வெப் சீரிஸ்களிலும் களமிறங்கியது. அந்த வகையில் கடந்த வாரம் வெளியான லோகி இரண்டாவது சீசனின் கிளைமேக்ஸ் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து ரசிகர்களால் இன்னும் வெளியேற முடியவில்லை. இந்நிலையில் தான், அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வாட் இஃப் சீரிஸின்புதிய டிரெய்லரை மார்வெல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான மார்வெல் திரைப்படங்களில் உள்ள, முக்கிய கதாபாத்திரங்களில் வாழ்வில் சிறிய மாற்றம் ஏற்பட்டால், அது கதையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மையப்படுத்தியது தான் வாட் இஃப் (What If) எனப்படும் சீரிஸ்.
வாட் இஃப் (What If) சீரிஸ் சிசன் 2 டிரெய்லர்:
அனிமேஷன் பாணியில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான வாட் இஃப் சீரிஸின், முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. குறிப்பாக இறுதி எபிசோடில் அல்ட்ரானை வில்லனாகவும், தேர்வு செய்யப்பட்ட ஹீரோக்களை அவெஞ்சர்ஸாகவும் மாற்றி சொல்லி இருந்த கதை அதகளப்படுத்தியது. இந்நிலையில் தான், வாட் இஃப் சீரிஸின் இரண்டாவது சீசனுக்கான டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதில், கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 22ம் தேதி இந்த சீரிஸின் முதல் எபிசோட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த 9 நாட்களிலேயே மொத்த 9 எபிசோட்களும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சீசனில் கதை என்ன?
முதல் சீசனில் ரியாலிட்டிகளை கொண்டு கதைகள் கூறப்பட்ட நிலையில், இரண்டாவது சீசனில் மல்டிவெர்ஸ் கொண்டு கதைகள் கூறப்படப்பட உள்ளன. ஹாங்க் பிம்மின் ஆன்ட்-மேன் மற்றும் டி'சாகாவின் பிளாக் பாந்தர் உள்ளிட்ட 1980களின் அவென்ஜர்ஸ் குழு, நோவா கார்ப்ஸுடன் பணிபுரியும் நெபுலா வெர்ஷன் மற்றும் சாகாருக்குப் பயணித்த டோனி ஸ்டார்க் உள்ளிட்டோரின் கதபாத்திரங்கள் டிரெய்லரின் இடம்பெற்றுள்ளன. அதோடு, மார்வெல் கதைகளில் இதுவரை இல்லாத கஹோரி எனும் புதிய கதாபாத்திரமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கும் டெஸராக்டில் இருந்து சக்திகள் கிடைப்பது போன்று தான் கதை அமைக்கப்பட்டுள்ளது. அவர் யார்? அவரால் என்ன ஆபத்து உள்ளது என்பதை மையப்படுத்தி தான் சீசன் கதை நகரும் என தெரிகிறது. முதல் பாகத்தில் தோன்றிய அதே வாட்ச்சரின் பார்வையில் இருந்து தான், இந்த கதையும் கூறப்படுகிறது.
இதனால் கஹோரி பற்றி அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அதோடு இந்த தொடரில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, அடுத்தடுத்து வெளியாகவுள்ள மார்வெலின் மல்டிவெர்ஸ் படங்களில் கஹோரி முக்கிய பங்கு வகிப்பார் எனவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் வெளியான தி மார்வெல்ஸ் படத்துடனும், கஹோரி கதாபாத்திரம் நேரடி தொடர்பினை கொண்டிருக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

