Bison Movie Review : மிரளவைக்கும் மாரி செல்வராஜ் துருவ் கூட்டணி..பைசன் திரைப்பட விமர்சனம்
Bison Movie Review. : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்தின் சிறப்பு திரையிடல் விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் நாளை அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பசுபதி, லால் , ரஜிஷா விஜயன் , அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். பா ரஞ்சித்தின் நீலம் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. கபடி வீரரான மனத்தி கணேசனின் வாழ்க்கைத் தழுவி உருவாகி ஸ்போர்ட்ஸ் டிராமா படமாக பைசன் உருவாகியுள்ளது. பைசன் படத்தின் சிறப்பு திரையிடலைப் பார்த்த விமர்சகர்கள் படத்திற்கு என்ன விமர்சனம் வழங்கி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்
பைசன் திரைப்பட விமர்சனம்
" தனது கவித்துவமான கதை சொல்லும் நடையால் மாரி செல்வராஜ் நம்மை இன்னொரு முறை வியக்கவைத்திருக்கிறார். திருநெல்வேலி தூத்துக்குடி நிலப்பரப்பிற்கு நம்மை கூட்டிச் செல்கிறார். அந்த மண்ணின் கோபத்தையும் வலியையும் பல்வேறு குறியீடுகளின் வழி கடத்துகிறார். மனத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் சாதி மற்றும் பிற காரணங்களால் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை பேசுகிறது. தனது தந்தையைப் போலவே துருவ் விக்ரம் இப்படத்திற்கு தனது முழு உழைப்பை கொடுத்திருக்கிறார். கபடி காட்சிகளுக்காக தனது உடலை முழுவதுமாக தயாரிபடுத்தி இருக்கிறார். பசுபதி தனது பார்வையாலேயே பல உணர்ச்சிகளை கடத்தி விடுகிறார். நாயகி அனுபமாவிற்கும் முக்கியமாக அங்கம் கதையில் இருக்கிறது. " என விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
#Bison first half - Solid. @mari_selvaraj once again blows you over with his poetic craft. The pain, anger, and frustration, have been metaphorical conveyed with rooted backdrop.Mari just transports you to the Tirunelveli- Tuticorin belt. Mix of the caste conflicts and violent…
— Rajasekar (@sekartweets) October 16, 2025





















