மேலும் அறிய

Watch video: ''சக்கு சக்கு வத்திக்குச்சி''.. அதே எனர்ஜியுடன் குத்தாட்டம் போட்ட மன்சூர் அலிகான்!

” வாவ் “ என வாயை பிளக்கும் அளவுக்கு இருக்கிறது மன்சூரின் லேட்டஸ்ட் நடனம்!

சக்கு சக்கு வத்திக்குச்சி :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை குவித்து வருகிறது. படத்தின் சில காட்சிகளில் லோகேஷ் சில ரெட்ரோ பாடல்களை வைத்திருந்தார். அது பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது . அந்த வகையில் படத்தின் ஆரம்ப காட்சி ஒன்றிலும், ஜெயில் காட்சியிலும் இடம்பெற்ற 'சக்குச் சக்கு வத்திக்குச்சி சட்டுனுதான் பத்திக்கிச்சு' எனும் பாடல் சமீப நாட்களாக சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடல் 1995-ம் ஆண்டு வெளியான `அசுரன்' எனும் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் .  பிரபல கவிஞர்  பிறைசூடன் எழுதிய இந்த பாடலுக்கு ஆதித்தன் இசையமைத்திருந்தார். பாடலுக்கு புரோகிராம் செய்தவர் ஹாரிஸ் ஜெயராஜ் . இதனை அவரே ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

ரீ-கிரியேட் செய்த மன்சூர் அலிகான் :

சக்கு சக்கு வத்திக்குச்சி பாடலுக்கு மன்சூர் அலிகான் க்யூட் அண்ட் கூலான நடன அசைவுகளை போட்டிருப்பார். அந்த பாடலை பார்க்காதவர்கள் கூட விக்ரம் திரைப்பட வைரலுக்கு பிறகு நிச்சயம் பார்த்திருப்பீர்கள். இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பலரும் அந்த போஷனுக்கு நடனமாடி பதிவிட்டு வரும் நிலையில் , நடிகர் மன்சூர் அலிகானும் தன்னுடைய பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். 1995 ஆம் ஆண்டு என்ன மாதிரியான  துள்ளல் நடன அசைவுகளை மன்சூர் போட்டாரோ , அதை அப்படியே  செய்து அசத்தியிருக்கிறார்.” வாவ் “ என வாயை பிளக்கும் அளவுக்கு மன்சூர் அலிகான் ஆடிய நடனத்தை கீழே காணலாம்.


ஃபேன் பாய் லோகேஷ் :

லோகேஷ் கனகராஜ்  மிகப்பெரிய கமல் ரசிகன் என்பது நமக்கு தெரியும். அதே அளவிற்கு மன்சூர் அலிகானின் தீவிர ரசிகரும் கூட. அவர் கார்த்தியை வைத்து இயக்கிய கைதி திரைப்படத்தை முதன் முதலில் மன்சூர் அலிகானை மனதில் வைத்துதான் எழுதியிருந்தார். அதனை பல மேடைகளில் அவரே கூறியிருக்கிறார். லோகேஷ் மன்சூர் பற்றி கூறுகையில் “ மன்சூர் அலிகானின் இயல்பான சுவாரஸ்ய குணம் எனக்கு பிடிக்கும் , அவர் கொடுத்த நேர்காணலில் தொகுப்பாளர் ஒரு பக்கம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க , அவர் மரத்தின் இலைகளை பறித்து பீப்பீ ஊதிக்கொண்டிருப்பார். அது போல எந்த நடிகராவது செய்ய முடியுமா ? அது அவரால் மட்டும்தான் முடியும் .அவர் படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் வித்தியாசமானவர் “ என்றார். அந்த நேர்காணலுக்கு பிறகு மன்சூர் அலிகானின் பல தக் லைஃப் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Yamaha Scooter Launch: ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
ஆக்டிவாவுக்கு ஆப்பு கன்பார்ம்.! ஃபாசினோ, ரேZR ஹைப்ரிட்களின் 2026 பதிப்பை இறக்கிய யமாஹா; விலை என்ன.?
Trump on Hormuz: ''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
''ஹார்முஸ் அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ளது''; மீண்டும் ஈரானை சீண்டும் ட்ரம்ப்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
Embed widget