மேலும் அறிய

HBD Manisha Koirala : அழகான ராட்சசி மனிஷா கொய்ராலாவின் பிறந்தநாள் இன்று.. இதெல்லாம் பெஸ்ட் மூவிஸ்

நடிகை மனிஷா கொய்ராலா பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடிப்பில் வெளியான படங்களில் தவறாமல் பார்க்க வேண்டிய படங்கள் என்னென்ன? 

90-ஸ் கிட்ஸ்களின் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக தமிழ், இந்தி மட்டுமின்றி பல மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இந்த அழகான ராட்சசியின் 53-வது பிறந்தநாள் இன்று. அவர் தமிழில் நடித்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெற்றன. அவரின் நடிப்பில் அவசியம் பார்க்க வேண்டிய படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

HBD Manisha Koirala : அழகான ராட்சசி மனிஷா கொய்ராலாவின் பிறந்தநாள் இன்று.. இதெல்லாம் பெஸ்ட் மூவிஸ்

பாம்பே :

தமிழ் சினிமாவில் மனிஷா கொய்ராலாவை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மணிரத்னம். பாம்பே படத்தில் ஷைலா பானு என்ற இஸ்லாமியப் பெண்ணாக இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருப்பார். இப்படத்தில் அவர் நடிக்கும்போது அவரின் வயது 20. பலரும் இந்த வாய்ப்பை தேவையில்லை என்ற போது ஒளிப்பதிவாளர் அசோக் மேத்தாவின் அறிவுரையால்தான் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படம் மனிஷாவுக்கு நல்ல ஒரு வரவேற்பை பெற்று கொடுத்தது. 

உயிரே :

மணிரத்னம் இயக்கத்தில் 1998-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் ஷாருக்கான் ஜோடியாக ஒரு காஷ்மீரை சேர்ந்த ஒரு தீவிரவாத பெண்ணாக மேக்னா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். இப்படம் ஏராளமான விருதுகளை குவித்தது. முதலில் ஹிந்தியில் வெளியான இப்படம் பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. 

HBD Manisha Koirala : அழகான ராட்சசி மனிஷா கொய்ராலாவின் பிறந்தநாள் இன்று.. இதெல்லாம் பெஸ்ட் மூவிஸ்

இந்தியன் :

1996-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருத்தர் மனிஷா கொய்ராலா. இப்படத்தில் அவர் ஒரு ப்ளூ கிராஸ் சொசைட்டி உறுப்பினராக விலங்குகள் மீது மிகுந்த பாசம் கொண்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

முதல்வன் :

1999-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படம் "முதல்வன்". தேன்மொழி கதாபாத்திரத்தில் கிராமத்து சுட்டி பெண்ணாக மனிஷா கொய்ராலா நடித்திருந்தார். 

காமோஷி : தி மியூசிகல் :

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் 1996-ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான திரைப்படம் "காமோஷி : தி மியூசிகல்". சல்மான் ஜோடியாக இப்படத்தில் அன்னி என்ற அப்பாவித்தனமான கதாபாத்திரத்தில்  நடித்திருந்தார் மனிஷா கொய்ராலா.  

பாபா : 

2002-ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக மனிஷா கொய்ராலா நடித்த படம் 'பாபா'. இப்படத்தில் சாமுண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் மனிஷா நடித்திருந்தார். இதுவே தமிழில் அவர் ஹீரோயினாக நடித்த கடைசி படம். 

மாப்பிள்ளை : 

2011-ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் - ஹன்சிகா நடித்த திரைப்படம் 'மாப்பிள்ளை'. இப்படத்தில் பணக்கார மாமியாராக ராஜேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருந்தார் மனிஷா  கொய்ராலா.

தலைப்பு செய்திகள்

*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: சந்திரகலா ஆட்கள் ரகசிய க்ளிக்.. ஆதாரத்தை பார்த்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget