Kangana Ranaut: "அரசியல் வாழ்க்கை ரொம்ப கஷ்டம்" மனம் திறந்த பா.ஜ.க. எம்.பி. கங்கனா ரனாவத்!
அரசியல் வாழ்க்கையை புரிந்துக்கொள்ள தனக்கு நீண்ட காலம் தேவைப்பட்டதாக நடிகையும், பா.ஜ.க எம்.பி.யுமான கங்கனாரனாவத் கூறியுள்ளார்.
அரசியல் வாழ்க்கையை புரிந்துக்கொள்ள தனக்கு நீண்ட காலம் பிடித்ததாக நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.
எம்.பி.யான கங்கனா ரனாவத்:
சமீபத்தில் இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் பா.ஜ.க. தொடர்ச்சியாக 3வது முறையாக ஆட்சியை பிடித்தது. 2 முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த பாஜக இம்முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. மோடி 3வது முறையாக பிரதமராக கடந்த ஜூன் 9 ஆம் தேதி பதவியேற்றார். இதனிடையே பாஜக சார்பில் இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட்டார்.
அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 70 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று முதல்முறையாக களம் கண்ட அரசியல் களத்தில் வெற்றி அடைந்து எம்.பியாக தேர்வாகியுள்ளார். கங்கனா தேர்தலில் வெற்றி பெற்றால் நடிப்பதை கைவிடுவதாக கூறியிருந்தார். சொன்னதை கங்கனா செய்வாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சினிமாவை விட அரசியல் கடினம்:
இதனிடையே கங்கனா ரனாவத் பேட்டி ஒன்றில், தன்னுடைய அரசியல் வாழ்க்கை பற்றி பேசினார். அதாவது, “எனது தாத்தா சர்ஜூ சிங் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அதனால் அரசியலுக்கான வாய்ப்புகள் என்பது எப்போதும் என்னுடைய குடும்பத்தில் இருக்கும். என்னுடைய முதல் படமான கேங்க்ஸ்டரில் நடித்த பிறகு எனக்கு தொடர்ச்சியாக அரசியல் வாய்ப்புகள் வரத் தொடங்கியது. எனக்கு மட்டுமல்ல, என் தந்தைக்கும், சகோதரிக்கும் கூட அரசியலுக்கு வர சொல்லி வாய்ப்புகள் வந்தது.
70k leading 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/RDx6xCrn8E
— VAIBHAV 🇮🇳 (@BhaktWine) June 4, 2024
எனவே இப்போது தான் முதல்முறையாக நான் அரசியலுக்கு வர வாய்ப்பு வந்தது என்பது இல்லை. அரசியலில் எனக்கு ஆர்வம் உள்ளது. சினிமாவை விட அரசியல் வாழ்க்கை கடினமான ஒன்று. சினிமா பிரபலமாக ஷூட்டிங்கிற்கும், தியேட்டர்களுக்கும் சென்று நிம்மதியான வாழ்க்கை வாழலாம். பிரபலங்களின் வாழ்க்கை ரொம்ப எளிமையானது.
ஜக்கி வாசுதேவ் அறிவுரை:
இதனால் எனக்கு அரசியல் வாழ்க்கையை புரிந்துக்கொள்ள நீண்ட காலம் பிடித்தது. மருத்துவர்களை எப்படி பிரச்சினை உள்ளவர்கள் பார்க்க வருகிறார்களோ, அப்படித்தான் அரசியல் பிரபலங்களையும் பார்க்க வருவார்கள். வாழ்க்கையில் பிடித்ததை செய்பவர்கள் புத்திசாலிகள் என்றும், தேவையானதை செய்பவர்கள் மேதைகள் என்றும் எனது குருவான ஜக்கி வாசுதேவ் கூறியிருப்பதை பின்பற்றி வருகிறேன் என கங்கனா கூறியுள்ளார்.