Sivakarthikeyan New Movie: மண்டேலா இயக்குநருடன் கைகோர்க்கிறாரா சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயன் படத்தை மண்டேலா இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகைச்சுவை நடிகர் யோகிபாபுவை கதாநாயகனாக வைத்து மண்டேலா என்ற படத்தை இயக்கியவர் மடோன் அஸ்வின். வித்தியாசமான கதையமைப்புடன் இந்தாண்டு ஏப்ரல் மாதம் ஓடிடியில் வெளியான மண்டேலா படத்துக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. மேலும் அப்படம் ஆஸ்கர் விருது போட்டிக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கோலிவுட்டில் அனைவராலும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறியிருக்கிறார் மடோன் அஸ்வின். இந்நிலையில் மடோன் அஸ்வின் சிவகார்த்திகேயனை வைத்து படம் ஒன்றை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனும், மடோன் அஸ்வினும் இணையவிருக்கும் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அதற்கான முன் தொகையை வேல்ஸ் நிறுவனத்திடமிருந்து சிவகார்த்திகேயன் பெற்றுவிட்டார் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.
நடிகர் கார்த்திக் குமார் இரண்டாவது திருமணம்… பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர்!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் அவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்திலும், சிங்கப்பாதை என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்தப் பட வேலைகளை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Viveka Lyricist Interview : ’ஊ சொல்றியா மாமா ஊஹும் சொல்றியா பாடலை ஆண்கள் எதிர்க்கவில்லை, கொண்டாடுகின்றனர்’ பாடலாசிரியர் விவேகா கலகல பேட்டி..!
Thangamani DVAC Raid: கிரிப்டோவில் தங்கமணி முதலீடு செய்ய காரணம் என்ன? ஆதாரங்கள் எங்கு இருக்கும்?
ஓ சொல்றியா மாமா..ம்ஹும் சொல்றியா.. வழக்கு போட்ட அமைப்பு.. காரணம் தெரியுமா?
'சகலகலா டாக்டர் டாக்டர்…' மருத்துவர் ஆன ஷங்கர் மகள்… Dr. அதிதி ஷங்கர் எம்.பி.பி.எஸ்.!